தமிழகத்தின் ‘இந்த’ 22 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும் – வானிலை அறிக்கை!

0
தமிழகத்தின் 'இந்த' 22 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும் - வானிலை அறிக்கை!
தமிழகத்தின் 'இந்த' 22 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும் - வானிலை அறிக்கை!
தமிழகத்தின் ‘இந்த’ 22 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும் – வானிலை அறிக்கை!

தென்‌ தமிழ்நாட்டில் (1 கிலோமீட்டர்‌ உயரம்வரை) நிலவும்‌ வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்யும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இது குறித்து விவரங்களை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.

20.10.2021, 21.10.2021: வேலூர்‌, ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, திருப்பத்தூர்‌, கிருஷ்ணகிரி, தர்மபுரி, கள்ளக்குறிச்சி, சேலம்‌, ஈரோடு, நாமக்கல்‌, திருப்பூர்‌, நீலகிரி, கோயம்புத்தூர்‌, தேனி, திண்டுக்கல்‌, மதுரை, விருதுநகர்‌, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, கரூர்‌, திருச்‌சிராப்பள்ளி மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய கன முதல்‌ மிக கன மழையும்‌, ஏனைய மாவட்டங்கள்‌ மற்றும்‌ புதுவை, காரைக்கால்‌ பகுதிகளில்‌ அநேக இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழையும்‌ பெய்யக்கூடும்‌.

தமிழகத்தில் டிச.1 முதல் கேபிள் டிவி கட்டணம் உயர்வு – பொதுமக்கள் அதிர்ச்சி!

22.10.2021: மேற்கு தொடர்ச்‌சி மலையை ஒட்டிய மாவட்டங்கள்‌ மற்றும்‌ அதனை ஒட்டிய உள்‌ மாவட்டங்கள்‌, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம்‌, திருப்பத்தூர்‌, நாமக்கல்‌, ஈரோடு மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய கன மழையும்‌, ஏனைய தென்‌ கடலோர மாவட்டங்கள்‌, டெல்டா மாவட்டங்கள்‌ மற்றும்‌ புதுவை, காரைக்கால்‌ பகுதிகளில்‌ அநேக இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழையும்‌ பெய்யக்கூடும்‌.

23.10.2021, 24,10.2021: மேற்கு தொடர்ச்‌சி மலையை ஓட்டிய மாவட்டங்கள்‌ மற்றும்‌ அதனை ஓட்டிய உள்‌ மாவட்டங்கள்‌, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம்‌, நாமக்கல்‌, வேலூர்‌, திருவண்ணாமலை மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய கன மழையும்‌, ஏனைய மாவட்டங்கள்‌ மற்றும்‌ புதுவை, காரைக்கால்‌ பகுதிகளில்‌ அநேக இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழையும்‌ பெய்யக்கூடும்‌.

SBI வங்கி வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு – நெட் பேங்கிங்! எளிய வழிமுறைகள்!

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம்‌ ஓரளவு மேகமூட்டத்துடன்‌ காணப்படும்‌. நகரின்‌ ஒருசில பகுதிகளில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசான மழை பெய்யக்கூடும்‌. அதிகபட்ச வெப்பநிலை 35 மற்றும்‌ குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்‌சியஸை ஒட்டி இருக்கும்‌.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!