தமிழகத்தின் 16 மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்க்கும் – வானிலை ஆய்வு மையம்!

0
தமிழகத்தின் 16 மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்க்கும் - வானிலை ஆய்வு மையம்!
தமிழகத்தின் 16 மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்க்கும் - வானிலை ஆய்வு மையம்!
தமிழகத்தின் 16 மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்க்கும் – வானிலை ஆய்வு மையம்!

தென்‌ மேற்கு வங்க கடல்‌ பகுதிகளில்‌ (5.8 கிலோமீட்டர்‌ உயரம்வரை) நிலவும்‌ வளிமண்டல மேலடுக்கு சுழற்‌சி காரணமாக இன்று டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர்‌, திருவாரூர்‌, நாகப்பட்டினம்‌, மயிலாடுதுறை மற்றும்‌ திருச்சி, அரியலூர்‌, பெரம்பலூர்‌ மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய மிக கன மழையும்‌, திருநெல்வேலி, தூத்துக்குடி, புதுக்கோட்டை, சிவகங்கை, சேலம்‌, விழுப்புரம்‌, கள்ளக்குறிச்‌சி , கடலூர்‌ மாவட்டங்கள்‌ மற்றும்‌ காரைக்காலில்‌ ஓரிரு இடங்களில்‌ இடியுடன்‌ கூடிய கன மழையும்‌, ஏனைய மாவட்டங்கள்‌ மற்றும்‌ புதுவை பகுதிகளில்‌ பெரும்பாலான இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய மிதமான மழையும்‌ பெய்யக்கூடும்‌.

03.10.2021: மதுரை, தென்காசி , தேனி, திண்டுக்கல்‌, சேலம்‌ மற்றும்‌ நாமக்கல்‌ மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய கன மழையும்‌, ஏனைய மாவட்டங்கள்‌ மற்றும்‌ புதுவை காரைக்கால்‌ பகுதிகளில்‌ பெருமபாலான இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய மிதமான மழையும்‌ பெய்யக்கூடும்‌.

ரேஷன் கார்டில் ஆதார் அப்டேட் செய்வது அவசியம்- 5 நிமிடங்கள் போதும்!

04.10.2021: தென்‌ மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய கன முதல்‌ மிக கன மழையும்‌, சேலம்‌, தருமபுரி, ஈரோடு, கோயம்புத்தூர்‌, அரியலூர்‌, பெரம்பலூர்‌ மற்றும்‌ டெல்டா மாவட்டங்கள்‌, காரைக்கால்‌ பகுதியில்‌ ஓரிரு இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய கன மழையும்‌, ஏனைய மாவட்டங்கள்‌ மற்றும்‌ புதுவை, பகுதிகளில்‌ பெருமபாலான இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய மிதமான மழையும்‌ பெய்யக்கூடும்‌

05.10.2021, 06.10.2021: கடலோர மாவட்டங்கள்‌ மற்றும்‌ வட உள்‌ மாவட்டங்களில்‌ ஒருசில இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய கன முதல்‌ மிக கன மழையும்‌, ஏனைய மாவட்டங்கள்‌ மற்றும்‌ புதுவை, காரைக்கால்‌ பகுதிகளில்‌ பெருமபாலான இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய மிதமான மழையும்‌ பெய்யக்கூடும்‌.

தமிழக கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி – ஆய்வு செய்ய அரசு உத்தரவு!

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம்‌ ஓரளவு மேகமூட்டத்துடன்‌ காணப்படும்‌. நகரின்‌ ஒருசில பகுதிகளில்‌ இடிமின்னலுடன்‌ கூடிய லேசான முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. அதிகபட்ச வெப்பநிலை 34 மற்றும்‌ குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்‌சியஸை ஓட்டி இருக்கும்‌.

மீனவர்களுக்கான எச்சரிக்கை:

வங்கக்‌ கடல்‌ பகுதிகள்‌

02.10.2021: இலங்கை கடற்கரைக்கு அப்பால்‌ உள்ள தென்மேற்கு வங்கக்‌ கடல்‌ பகுதிகள், மன்னார்‌ வளைகுடா பகுதிகளில்‌ சூறாவளி காற்று மணிக்கு 40 முதல்‌ 50 கிலோ மீட்டர்‌ வேகத்தில்‌ வீசக்கூடும்‌. மீனவர்கள்‌ இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம்‌ என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்‌.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!