தமிழகத்தின் ‘இந்த’ 14 மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்க்கும் – சென்னை வானிலை ஆய்வு மையம்!

0
தமிழகத்தின் 'இந்த' 14 மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்க்கும் - சென்னை வானிலை ஆய்வு மையம்!
தமிழகத்தின் 'இந்த' 14 மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்க்கும் - சென்னை வானிலை ஆய்வு மையம்!
தமிழகத்தின் ‘இந்த’ 14 மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்க்கும் – சென்னை வானிலை ஆய்வு மையம்!

வளிமண்டல மேலடுக்கு சுழற்‌சி காரணமாக இன்று நீலகிரி, கோயம்புத்தூர்‌, தேனி மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய கன முதல்‌ மிக கன மழையும்‌, கன்னியாகுமரி, தென்காசி, திண்டுக்கல்‌, ஈரோடு, திருப்பூர்‌, கள்ளக்குறிச்சி, விழுப்புரம்‌, திருவண்ணாமலை, சேலம்‌, திருச்சிராப்பள்ளி, கரூர்‌ மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய கன மழையும்‌, ஏனைய மாவட்டங்கள்‌ மற்றும்‌ புதுவை, காரைக்கால்‌ பகுதிகளில்‌ அநேக இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய மிதமான மழையும்‌ பெய்ய கூடும்‌.

PF பயனாளர்கள் கவனத்திற்கு – டிஜிட்டல் முறையில் EPF & EPS நியமனம்!

17.10.2021: கன்னியாகுமரி, தென்காசி, தேனி, திண்டுக்கல்‌, மதுரை, சிவகங்கை, கரூர்‌, நாமக்கல்‌, திருச்‌சாராப்பள்ளி, புதுக்கோட்டை, கடலூர்‌, சேலம்‌, ஈரோடு, பெரம்பலூர்‌ மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய கன மழையும்‌, ஏனைய வட மாவட்டங்கள்‌ மற்றும்‌ புதுவை, காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஒரு சில இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய மிதமான மழையும்‌, தென்‌ மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழையும்‌ பெய்ய கூடும்‌.

18.10.2021: வடக்கு உள்‌ மாவட்டங்கள்‌, கடலோர மாவட்டங்கள்‌ மற்றும்‌ புதுவை, காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌

19.10.2021: தென்‌ மாவட்டங்கள்‌, கடலோர மாவட்டங்கள்‌ மற்றும்‌ புதுவை, காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஒரு சில இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌.

தமிழக 10ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு, இன்னும் 2 நாள் தான் – முக்கிய அறிவிப்பு!

20.10.2021: தென்‌ மாவட்டங்கள்‌, டெல்டா மாவட்டங்கள்‌, புதுக்கோட்டை, அரியலூர்‌, பெரம்பலூர்‌, திருச்சிராப்பள்ளி மாவட்டங்களில்‌ ஒரு ல இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய கன மழையும்‌, ஏனைய வட மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ லேசான மழை பெய்யக்கூடும்‌.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம்‌ ஓரளவு மேக மூட்டத்துடன்‌ காணப்படும்‌. நகரின்‌ ஒருசில பகுதிகளில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்ய கூடும்‌. அதிகபட்ச வெப்பநிலை 35% மற்றும்‌ குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்‌சயஸை ஓட்டி இருக்கும்‌.

மீனவர்களுக்கான எச்சரிக்கை:

வங்கக்‌ கடல்‌ பகுதிகள்‌:

16.10.2021, 17.10.2021: குமரிக்கடல்‌ மற்றும்‌ மன்னார்‌ வளைகுடா பகுதிகளில்‌ பலத்த காற்று மணிக்கு 40 முதல்‌ 50 கிலோ மீட்டர்‌ அவ்வப்போது 60 கிலோ மீட்டர்‌ வேகத்தில்‌ வீசக்கூடும்‌. மீனவர்கள்‌ இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம்‌ என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்‌.

TN TRB 2,331 உதவி பேராசிரியர் காலிப்பணியிடங்கள் – நேர்முகத் தேர்வு நடத்த கோரிக்கை!

16.10.2021: வடக்கு ஆந்திர கடலோரப்‌ பகுதிகளில்‌ பலத்த காற்று மணிக்கு 40 முதல்‌ 50 கிலோ மீட்டர்‌ வேகத்தில்‌ வீசக்கூடும்‌. மீனவர்கள்‌ இப்பகுதிகளுக்கு எச்சரிக்கையுடன்‌ செல்ல அறிவுறுத்தப்படுகிறார்கள்‌.

அரபிக்கடல்‌ பகுதிகள்‌:

16.10.2021, 17.10.2021: தென்‌ இழக்கு அரபிக்கடல்‌, கேரளா கடலோரப்‌ பகுதி லட்சத்தீவு மற்றும்‌ மாலத்தீவு பகுதிகளில்‌ சூறாவளி காற்று மணிக்கு 40 முதல்‌ 50 கிலோ மீட்டர்‌ வேகத்தில்‌ வீசக்கூடும்‌. மீனவர்கள்‌ இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம்‌ என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்‌.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!