தமிழகத்தின் 11 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும் – சென்னை வானிலை மையம் அறிக்கை!

0
தமிழகத்தின் 11 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும் - சென்னை வானிலை மையம் அறிக்கை!
தமிழகத்தின் 11 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும் - சென்னை வானிலை மையம் அறிக்கை!
தமிழகத்தின் 11 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும் – சென்னை வானிலை மையம் அறிக்கை!

குமரிக்கடல்‌ பகுதியில்‌ நிலவும்‌ வளிமண்டல மேலடுக்கு சுழற்‌சி காரணமாக தமிழகத்தில் டிசம்பர் 3ம் தேதி வரை கீழ்க்கண்ட மாவட்டங்களில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வானிலை தகவல்‌:

29.11.2021: விருதுநகர்‌, ராமநாதபுரம்‌, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய கன முதல்‌ மிக கன மழையும்‌ மதுரை, திருநெல்வேலி, கடலூர்‌, விழுப்புரம்‌, மயிலாடுதுறை, நாகப்பட்டினம்‌ மற்றும்‌ புதுவை, காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய கன மழையும்‌, வட கடலோர மாவட்டங்கள்‌, ஏனைய டெல்டா மாவட்டங்களில்‌ பெரும்பாலான இடங்களில்‌ மிதமான மழையும்‌, ஏனைய மாவட்டங்களில்‌ லேசானது முதல்‌ மிதமான மழையும்‌ பெய்யக்கூடும்‌.

30.11.2021: கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய கன மழையும்‌, ஏனைய மாவட்டங்கள்‌ மற்றும்‌ புதுவை, காரைக்கால்‌ பகுதிகளில்‌ அனேக இடங்களில்‌ லேசானது முதல்‌ மிதமான மழையும்‌ பெய்யக்கூடும்‌.

மத்திய அரசு ஊழியர்களுக்கு மீண்டும் சம்பள உயர்வு – புத்தாண்டில் நற்செய்தி?

01.12.2021: மேற்கு தொடர்ச்‌சி மலையை ஓட்டிய மாவட்டங்கள்‌ மற்றும்‌ தென்‌ மாவட்டங்களில்‌ ஒரு சில இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய மிதமான மழையும்‌, கடலோர மாவட்டங்கள்‌, உள்‌ மாவட்டங்கள்‌ மற்றும்‌ புதுவை, காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ லேசானது முதல்‌ மிதமான மழையும்‌ பெய்யக்கூடும்‌.

02.12.2021: மேற்கு தொடர்ச்‌சி மலையை ஒட்டிய மாவட்டங்கள்‌ மற்றும்‌ அதனை ஒட்டிய உள்‌ மாவட்டங்களில்‌ ஒரு சில இடங்களில்‌ மிதமான மழையும்‌, ஏனைய மாவட்டங்கள்‌ மற்றும்‌ புதுவை, காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ லேசான மழையும்‌ பெய்யக்கூடும்‌.

பெண்களுக்கு இலவச கேஸ் இணைப்பு வழங்கும் உஜ்வாலா 2.0 திட்டம் – விண்ணப்பிக்கும் வழிமுறைகள் இதோ!

03.12.2021: தென்‌ மாவட்டங்கள்‌ மற்றும்‌ உள்‌ மாவட்டங்களில்‌ ஒரு சில இடங்களில்‌ லேசானது முதல்‌ மிதமான மழையும்‌, கடலோர மாவட்டங்கள்‌ மற்றும்‌ புதுவை, காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ லேசான மழையும்‌ பெய்யக்கூடும்‌.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு. நகரின்‌ ஒரு சில இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்‌. அடுத்த 48 மணி நேரத்திற்கு. நகரின்‌ ஒரு சில இடங்களில்‌ லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌.

மீனவர்களுக்கு எச்சரிக்கை:

வங்க கடல் பகுதிகள்‌:

29.11.2021: குமரிக்கடல்‌ பகுதிகளில்‌ சூறாவளி காற்று மணிக்கு 40 முதல்‌ 50 கிலோ மீட்டர்‌ வேகத்தில்‌ வீசக்கூடும்‌.

30.11.2021: தெற்கு அந்தமான்‌ கடற்பகுதியில்‌ புதிய குறைந்த காற்ற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது. அதனை தொடர்ந்து 48 மணி நேரத்தில்‌ மேற்கு வடமேற்கு திசையில்‌ நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறக்கூடும்‌.

தமிழகத்தில் வெள்ளிக்கிழமை (டிச.3) உள்ளூர் விடுமுறை – மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு!

30.11.2021: தெற்கு அந்தமான்‌ கடல்‌ பகுதியில்‌ சூறாவளி காற்று மணிக்கு 40 முதல்‌ 50 கிலோ மீட்டர்‌ வேகத்திலும்‌ இடையிடையே 60 கிலோ மீட்டர்‌ வேகத்துலும்‌ பேசக்கூடும்‌.

01.12.2021: தெற்கு அந்தமான்‌ கடல்‌ பகுதிகள்‌, தென்‌கிழக்கு வங்க கடல்‌ பகுததிகள்‌ மற்றும்‌ அதனை ஒட்டிய மத்திய கிழக்கு வங்கக்‌ கடல்‌ பகுதிகளில்‌ சூறாவளி காற்று மணிக்கு 40 முதல்‌ 50 கிலோ மீட்டர்‌ வேகத்துலும்‌ இடையிடையே 60 கிலோ மீட்டர்‌ வேகத்திலும் பெய்ய கூடும்‌. மீனவர்கள்‌ இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம்‌ என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்‌

அரபிக்கடல்‌ பகுதிகள்‌

29.11.2021: தென்கிழக்கு அரபிக்கடல்‌, கேரளா கடலோர பகுதிகள்‌ மற்றும்‌ லட்சத்தீவு பகுதிகளில்‌ சூறாவளி காற்று மணிக்கு 40 முதல்‌ 50 கிலோ மீட்டர்‌ வேகத்தில்‌ வீசக்கூடும்‌. மீனவர்கள்‌ இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம்‌ என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்‌

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!