தமிழகத்தின் 8 மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்க்கும் – சென்னை வானிலை ஆய்வு மையம் அறிக்கை!

0
தமிழகத்தின் 8 மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்க்கும் - சென்னை வானிலை ஆய்வு மையம் அறிக்கை!
தமிழகத்தின் 8 மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்க்கும் - சென்னை வானிலை ஆய்வு மையம் அறிக்கை!
தமிழகத்தின் 8 மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்க்கும் – சென்னை வானிலை ஆய்வு மையம் அறிக்கை!

தெற்கு வங்க கடற்பகுதியில்‌ (3.1 கிலோ மீட்டர்‌ உயரம்‌ வரை) நிலவும்‌ வளிமண்டல மேலடுக்கு சுழற்சி தற்பொழுதுள்ள சூழ்நிலையில்‌ குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறுவதற்கு வாய்ப்பில்லை. இந்த மேலடுக்கு சுழற்‌சியின்‌ காரணமாக நவம்பர் 29 ம் தேதி வரை இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

வானிலை தகவல்‌:

25.11.2021 ராமநாதபுரம்‌, திருநெல்வேலி, தூத்துக்குடி, புதுக்கோட்டை, நாகப்பட்டினம்‌ மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய கன முதல்‌ மிக கன மழையும்‌, கடலூர்‌, அரியலூர்‌, கன்னியாகுமரி, டெல்டா மாவட்டங்கள்‌ மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ இடி மின்னலுடன்‌
கூடிய கன மழையும்‌ ஏனைய கடலோர மாவட்டங்கள்‌, புதுச்சேரி மற்றும்‌ தென்‌ மாவட்டங்களில்‌ அநேக இடங்களில்‌ மிதமான மழையும்‌, உள்‌ மாவட்டங்களில்‌ அநேக இடங்களில்‌ லேசானது முதல்‌ மிதமான மழையும்‌ பெய்யக்கூடும்‌.

26.11.2021: கன்யாகுமரி, திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய கன முதல்‌ மிக கன மழையும்‌, கடலூர்‌, விழுப்புரம்‌, செங்கல்பட்டு, சென்னை, காஞ்சிபுரம்‌, திருவள்ளூர்‌, மதுரை, புதுக்கோட்டை, தேனி, தூத்துக்குடி மாவட்டங்கள்‌ மற்றும்‌ புதுவை பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய கன மழையும்‌, ஏனைய மாவட்டங்கள்‌ மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ பெரும்பாலான இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய மிதமான மழையும்‌ பெய்யக்கூடும்‌.

மதுரை காமராஜர் பல்கலைக்கு 7 நாட்கள் விடுமுறை அறிவிப்பு – மாணவர்களுக்கு கொரோனா தொற்று!

27.11.2021: காஞ்சிபுரம்‌, இருவள்ளூர்‌ மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய கன முதல்‌ மிக கன மழையும்‌, சென்னை, திருவள்ளூர்‌, செங்கல்பட்டு, திருவண்ணாமலை, கடலூர்‌, விழுப்புரம்‌, சேலம்‌, நீலகிரி, கோயம்புத்தூர்‌, ஈரோடு, டெல்டா மாவட்டங்கள்‌ மற்றும்‌ புதுவை, காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய கன மழையும்‌, ஏனைய மாவட்டங்களில்‌ பெரும்பாலான இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய மிதமான மழையும்‌ பெய்யக்கூடும்‌.

28.11.2021: திருவள்ளூர்‌, ராணிப்பேட்டை, நீலகிரி மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய கன முதல்‌ மிக கன மழையும்‌, விழுப்புரம்‌, காஞ்சிபுரம்‌, செங்கல்பட்டு, கோயம்புத்தூர்‌, திருநெல்வேலி, தூத்துக்குடி, டெல்டா மாவட்டங்கள்‌ மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய கன மழையும்‌, ஏனைய மாவட்டங்கள்‌ மற்றும்‌ புதுவை பகுதிகளில்‌ பெரும்பாலான இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய மிதமான மழையும்‌ பெய்யக்கூடும்‌.

29.11.2021: தென்‌ மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ இடி மின்னலுடண்‌ கூடிய கன மழையும்‌, ஏனைய மாவட்டங்கள்‌ மற்றும்‌ புதுவை, காரைக்கால்‌ பகுதிகளில்‌ பெரும்பாலான இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய மிதமான மழையும்‌ பெய்யக்கூடும்‌.

தமிழகத்தில் அரைநாள் பள்ளிகளுக்கு விடுமுறை – மாவட்ட நிர்வாகங்கள் அறிவிப்பு!

சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு. நகரின்‌ ஒரு சில இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய மிதமான மமை பெய்யக்கூடும்‌. அதிகபட்ச வெப்பநிலை 31 மற்றும்‌ குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்‌சியஸை ஒட்டி இருக்கும்‌.

அடுத்த 48 மணி நேரத்திற்கு நகரின்‌ ஒரு சில இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய கன மழை பெய்யக்கூடும்‌. அதிகபட்ச வெப்பநிலை 30 மற்றும்‌ குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்‌சியஸை ஒட்டி இருக்கும்‌.

மீனவர்‌களுக்கான எச்சரிக்கை:

வங்க கடல்‌ பகுதிகள்‌:

25.11.2021,26.11.2021: குமரிக்கடல்‌, தென்மேற்கு வங்கக்‌ கடல்‌ மற்றும்‌ தென்‌ தமிழக கடலோரப்‌ பகுதிகளில்‌ சூறாவளி காற்று மணிக்கு 40 முதல்‌ 50 கிலோ மீட்டர்‌ வேகத்தில்‌ வீசக்கூடும்‌.

27.11.2021: குமரிக்கடல்‌, மாலத்தீவு பகுதிகளில்‌ சூறாவளி காற்று மணிக்கு 40 முதல்‌ 50 கிலோ மீட்டர்‌ வேகத்தில்‌ வீசக்கூடும்‌.

10ம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு – உதவித்தொகை பெறுவதற்கு தளர்வுகள்!

வரும்‌ 29ஆம்‌ தேதி தெற்கு அந்தமான்‌ கடற்பகுதியில்‌ புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது. இது மேலும்‌ வலுப்பெற்று மேற்கு வடமேற்கு திசையில்‌ நகரக்கூடும்‌ இதன்‌ காரணமாக

29.11.2021: தெற்கு அந்தமான்‌ கடற்‌ பகுதிகளில்‌ சூறாவளி காற்று மணிக்கு 40 முதல்‌ 50 கிலோ மீட்டர்‌ வேகத்தில்‌ வீசக்கூடும்‌. மீனவர்கள்‌ இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம்‌ என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்‌

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!