தமிழகத்தில் நவ.26 வரை இம்மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்க்கும் – வானிலை அறிக்கை!

0
தமிழகத்தில் நவ.26 வரை இம்மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்க்கும் - வானிலை அறிக்கை!
தமிழகத்தில் நவ.26 வரை இம்மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்க்கும் - வானிலை அறிக்கை!
தமிழகத்தில் நவ.26 வரை இம்மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்க்கும் – வானிலை அறிக்கை!

தெற்கு வங்க கடற்பகுதியில்‌ (5.8 கிலோ மீட்டர்‌ உயரம்‌ வரை) நிலவும்‌ வளிமண்டல மேலடுக்கு சுழற்‌சி அடுத்த 24 மணி நேரத்தில்‌ காற்றழுத்த தாழ்வுப்‌ பகுதியாக மாறக்கூடும்‌. இது மேலும்‌ மேற்கு வடமேற்கு திசையில்‌ வரும்‌ நாட்களில்‌ தமிழக கரையை நோக்‌கி நகரக்‌ கூடும்‌ இதன்‌ காரணமாக அடுத்த நான்கு நாட்களுக்கு கனமழை மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வானிலை தகவல்‌

23.11.2021: மதுரை, விருதுநகர்‌, ராமநாதபுரம்‌, தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய கன மழையும்‌, ஏனைய தென்‌ மாவட்டங்கள்‌, டெல்டா மாவட்டங்கள்‌ மற்றும்‌, காரைக்கால்‌ பகுதிகளில்‌ அநேக இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய மிதமான மழையும்‌, ஏனைய வட மாவட்டங்கள்‌ மற்றும்‌ புதுச்சேரி பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ லேசானது முதல்‌ மிதமான மழையும்‌ பெய்யக்கூடும்‌.

24.11.2021: திருநெல்வேலி, ராமநாதபுரம்‌, தூத்துக்குடி, கன்னியாகுமரி மற்றும்‌ டெல்டா மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய கன மழையும்‌, ஏனைய தென்‌ மாவட்டங்களில்‌ அநேக இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய மிதமான மழையும்‌, வட மாவட்டங்கள்‌ மற்றும்‌ புதுவை, காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ லேசானது முதல்‌ மிதமான மழையும்‌ பெய்யக்கூடும்‌.

TNPSC குரூப் 4 வி.ஏ.ஓ 1436 காலிப்பணியிடங்கள் – தேர்வர்கள் கவனத்திற்கு! விரைவில் அறிவிப்பு!

25.11.2021: காஞ்சிபுரம்‌, செங்கல்பட்டு, திருவள்ளூர்‌, ராணிப்பேட்டை மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய கன முதல்‌ மிக கன மழையும்‌, சென்னை, ராமநாதபுரம்‌, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய கன மழையும்‌, ஏனைய கடலோர மாவட்டங்கள்‌ மற்றும்‌ புதுவை, காரைக்கால்‌ பகுதிகளில்‌ அநேக இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய மிதமான மழையும்‌, உள்‌ மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ லேசானது முதல்‌ மிதமான மழையும்‌ பெய்யக்கூடும்‌.

26.11.2021, 27.11.2021: சென்னை, திருவள்ளூர்‌, காஞ்சிபுரம்‌, செங்கல்பட்டு மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய கன முதல்‌ மிக கன மழையும்‌, விழுப்புரம்‌, திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, வேலூர்‌, திருப்பத்தார்‌, ராமநாதபுரம்‌, புதுக்கோட்டை, டெல்டா மாவட்டங்கள்‌ மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய கன மழையும்‌, ஏனைய மாவட்டங்கள்‌ மற்றும்‌ புதுவை பகுதிகளில் அநேக இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய மிதமான மழையும்‌ பெய்யக்கூடும்‌.

Airtel ஐ தொடர்ந்து ப்ரீபெய்ட் ரீசார்ஜ் கட்டணங்களை உயர்த்திய VI – பயனர்கள் அதிர்ச்சி!

சென்னையை பொறுத்தவரை, அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம்‌ ஓரளவு மேக மூட்டத்துடன்‌ காணப்படும்‌. நகரின்‌ ஒரு சில இடங்களில்‌ லேசான மழை பெய்யக்கூடும்‌. அஇகபட்ச வெப்பநிலை 32 மற்றும்‌ குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்‌சயஸை ஒட்டி இருக்கும்‌. அடுத்த 48 மணி நேரத்ததிற்கு வானம்‌ ஓரளவு மேக மூட்டத்துடன்‌ காணப்படும்‌. நகரின்‌ ஒரு சில இடங்களில்‌ லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. அதிகபட்ச வெப்பநிலை 32 மற்றும்‌ குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்‌சியஸை ஓட்டி இருக்கும்‌.

மீனவர்களுக்கு எச்சரிக்கை:

வங்க கடல்‌ பகுதிகள்‌

26.11.2021, 27.11.2021: குமரிக்கடல்‌, மன்னார்‌ வளைகுடா, தென்மேற்கு வங்கக்‌ கடல்‌ மற்றும்‌ அதனை ஓட்டிய மத்திய மேற்கு வங்க கடல்‌ பகுதிகள்‌. தமிழக கடலோரப்‌ பகுதிகள்‌, அதனை ஓட்டிய தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளில்‌ சூறாவளி காற்று மணிக்கு 40 முதல்‌ 50 கிலோ மீட்டர்‌ வேகத்திலும்‌ இடையிடையே 60 கிலோ மீட்டர்‌ வேகத்துலும்‌ வீசக்கூடும்‌ மீனவர்கள்‌ இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம்‌ என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்‌

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!