தமிழகத்தின் 11 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும் – சென்னை வானிலை மையம் அறிக்கை!

0
தமிழகத்தின் 11 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும் - சென்னை வானிலை மையம் அறிக்கை!
தமிழகத்தின் 11 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும் - சென்னை வானிலை மையம் அறிக்கை!
தமிழகத்தின் 11 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும் – சென்னை வானிலை மையம் அறிக்கை!

தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் கடந்த 4ம் தேதி முதல் தொடங்கியுள்ளதால் பல்வேறு இடங்களில் வெயில் சுட்டெரிக்கிறது. இந்த நிலையில் தமிழகத்தில் இன்று முதல் மே 14ம் தேதி வரை பல்வேறு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

வானிலை தகவல்‌

நேற்று காலை ஆந்‌திரபிரதேச கடலோரம்‌ அருகே மத்‌திய மேற்கு வங்கக்கடல்‌ பகுதிகளில்‌ நிலவிய “அசானி” புயல்‌ நேற்று மாலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்து ஆந்திரபிரதேச மசூலிப்பட்டினம்‌ அருகே கரையை கடந்தது. இது இன்று (12.05.2022) காலை 05:30 மணி அளவில்‌ காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்து ஆந்‌திரபிரதேச மசூலிப்பட்டினத்துற்கு மேற்கே நிலவியது. இது இன்று காலை 08:30 மணி அளவில்‌ மேலும்‌ வலுவிழந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக அதே இடத்தில்‌ நிலவுகிறது. இது படிப்படியாக மேலும்‌ வலுவிழக்கூடும்‌.

ரயில் பயணிகளுக்கு ஹாப்பி நியூஸ் – இனி டிக்கெட் எடுப்பது ரொம்ப ஈஸி!

12.05.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஒரு சில இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌.

13.05.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ அநேக இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌.

14.05.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ அநேக இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. நீலகிரி, கோவை, திருப்பூர்‌, தேனி, திண்டுக்கல்‌, ஈரோடு, சேலம்‌, நாமக்கல்‌, கரூர்‌, திருச்சி, பெரம்பலூர்‌ மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

15.05.2022, 16.05.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஒரு சில இடங்களில்‌ லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌.

Exams Daily Mobile App Download

சென்னையை பொறுத்தவரை:

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம்‌ ஓரளவு மேகமூட்டத்துடன்‌ காணப்படும்‌. நகரின்‌ சில இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது / மிதமான மழை பெய்யக்கூடும்‌. அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்‌சியஸ்‌ மற்றும்‌ குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்‌சியஸை ஒட்டி இருக்கக்கூடும்‌.

மீனவர்களுக்கான எச்சரிக்கை :

12.05.2022: மன்னார்‌ வளைகுடா, குமரிக்கடல்‌ மற்றும்‌ அதனை ஒட்டிய தென்‌ மேற்கு வங்கக்கடல்‌ மற்றும்‌ தமிழக கடலோர பகுதிகளில்‌ பலத்த காற்று மணிக்கு 40 முதல்‌ 50 கிலோ மீட்டர்‌ வேகத்திலும்‌ இடையிடையே 60 கிலோ மீட்டர்‌ வேகத்திலும்‌ வீசக்கூடும்‌.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!