தமிழகத்தில் 15 மாவட்டங்களில் மழை பெய்யும் – வானிலை ஆய்வு மையம் அறிக்கை!

0
தமிழகத்தில் 15 மாவட்டங்களில் மழை பெய்யும் - வானிலை ஆய்வு மையம் அறிக்கை!
தமிழகத்தில் 15 மாவட்டங்களில் மழை பெய்யும் - வானிலை ஆய்வு மையம் அறிக்கை!
தமிழகத்தில் 15 மாவட்டங்களில் மழை பெய்யும் – வானிலை ஆய்வு மையம் அறிக்கை!

குமரிக்கடல்‌ பகுதிகளின்‌ மேல்‌ நிலவும்‌ வளிமண்டல கீழடுக்கு சுழற்‌சி மற்றும்‌ வெப்பச்சலனம்‌ காரணமாக தமிழகத்தில் தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட 15 மாவட்டங்களில் லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌ என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

வானிலை தகவல்‌:

05.06.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஒருசில இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌.

தமிழக மாணவர்கள் கவனத்திற்கு – பள்ளிகள் திறப்பு எப்போது? அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்!

06.06.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஒரு சில இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. நீலகிரி, கோயம்புத்தூர்‌, திருப்பூர்‌, தேனி, திண்டுக்கல்‌, ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம்‌, கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர்‌, திருவண்ணாமலை, வேலூர்‌, நாமக்கல்‌, கரூர்‌ மற்றும்‌ திருச்சி மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

07.06.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஒரு சில இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. நீலகிரி, கோயம்புத்தூர்‌, திருப்பூர்‌, தேனி, இண்டுக்கல்‌, ஈரோடு, கிருஷ்ணரி, தர்மபுரி, சேலம்‌, கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர்‌ மற்றும்‌ திருவண்ணாமலை மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

08.06.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஒருசில இடங்களில்‌ லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌.

Exams Daily Mobile App Download

09.06.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌.

அதிகபட்ச வெப்பநிலை:

05.06.2022: தமிழகத்தில்‌ ஓரிரு இடங்களில்‌ அதிகபட்ச வெப்பநிலை இயல்பிலிருந்து 2 -3 டிகிரி செல்‌சியஸ்‌ அதிகமாக இருக்கக்கூடும்‌.

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம்‌ ஓரளவு மேக மூட்டத்துடன்‌ காணப்படும்‌. நகரின்‌ சில இடங்களில்‌ லேசான / மிதமான மழை பெய்யக்கூடும்‌. அதிகபட்ச வெப்பநிலை 39-40 டிகிரி செல்‌சியஸ்‌ மற்றும்‌ குறைந்தபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸ்‌ அளவில்‌ இருக்கக்கூடும்‌.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here