தமிழகத்தின் 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை அறிக்கை!

0
தமிழகத்தின் 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை அறிக்கை!
தமிழகத்தின் 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை அறிக்கை!
தமிழகத்தின் 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை அறிக்கை!

உள்‌ தமிழ்நாட்டில்‌ நிலவும்‌ மேலடுக்கு சுழற்‌சி மற்றும்‌ வெப்பசலனத்தின் காரணமாக

06.07.2021: பெரம்பலூர்‌, அரியலூர்‌, சேலம்‌, தருமபுரி, கிருஷ்ணகிரி, புதுக்கோட்டை மற்றும்‌ டெல்டா (தஞ்சாவூர்‌, திருவாரூர்‌, நாகப்பட்டினம்‌, மயிலாடுதுறை) மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய கன மழையும்‌, ஏனைய மாவட்டங்கள்‌ மற்றும்‌ புதுவை, காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஒருசில இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழையும்‌ பெய்யக்கூடும்‌.

தமிழகத்தில் ஊரடங்கு தளர்வுகள் எதிரொலி – குவியும் சுற்றுலா பயணிகள்!

07.07.2021: தர்மபுரி, சேலம்‌, நாமக்கல்‌, திருச்சி, அரியலூர்‌, பெரம்பலூர்‌, கள்ளக்குறிச்‌சி மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய கன மழையும்‌, ஏனைய மாவட்டங்கள்‌ மற்றும்‌ புதுவை, காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஒருசில இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழையும்‌ பெய்யக்கூடும்‌.

08.07.2021: வேலூர்‌, திருவண்ணாமலை, ராணிப்பேட்டை மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய கன மழையும்‌, வட மாவட்டங்கள்‌ மற்றும்‌ புதுவை, காரைக்கால்‌ பகுஇகளில்‌ ஒரு இல இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழையும்‌, தென்‌ மாவட்டங்களில்‌ ஒரு இல இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசான மழையும்‌ பெய்யக்கூடும்‌.

TN Job “FB  Group” Join Now

09.07.2021 மற்றும்‌ 10.07.2021: மேற்கு தொடர்ச்ச மலையை ஓட்டிய (நீலகிரி, கோயம்புத்தூர்‌, தேனி, திண்டுக்கல்‌) மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. ஏனைய மாவட்டங்களில்‌ பெரும்பாலும்‌ வறண்ட வானிலையே நிலவும்‌.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்இற்கு வானம்‌ ஓரளவு மேகமூட்டத்துடன்‌ காணப்படும்‌, நகரின்‌ சில பகுதிகளில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசான மழை பெய்யக்கூடும்‌. அதிகபட்ச வெப்பநிலை 37 மற்றும்‌ குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்‌சியஸை ஒட்டி இருக்கும்‌.

மீனவர்களுக்கான எச்சரிக்கை :

வங்க கடல்‌ பகுதிகள்‌:

08.07.2021: தெற்கு வங்கக்கடல்‌, குமரிக்கடல்‌ மற்றும்‌ மன்னார்‌ வளைகுடா பகுதிகளில்‌ பலத்த காற்று மணிக்கு 40 முதல்‌ 50 கிலோமீட்டர்‌ வேகத்தில்‌ வீசக்கூடும்‌.

09.07.2021, 10.07.2021: தமிழ்நாட்டின்‌ கடலோர பகுதிகள்‌ மற்றும்‌ ஆந்‌திர கடலோரப்‌ பகுதிகளில்‌ பலத்த காற்று மணிக்கு 40 முதல்‌ 50 கிலோமீட்டர்‌ வேகத்தில்‌ வீசக்கூடும்‌.

அரபிக்கடல்‌ பகுதிகள்‌:

08.07.2021 முதல்‌ 10.07.2021 வரை : கேரளா, கர்நாடக கடலோர பகுதிகள்‌ மற்றும்‌ லட்சத்தீவு பகுதிகளில்‌ பலத்த காற்று மணிக்கு 40 முதல்‌ 50 கிலோமீட்டர்‌ வேகத்தில்‌ வீசக்கூடும்‌.

06.07.2021 முதல்‌ 10.07.2021 வரை தென்‌ மேற்கு, மத்திய மேற்கு அரபிக்கடல்‌ பகுதிகளில்‌ பலத்த காற்று மணிக்கு 40 முதல்‌ 50 கிலோமீட்டர்‌ வேகத்தில்‌ வீசக்கூடும்‌.

மீனவர்கள்‌ மேற்குறிப்பிட்ட தேதிகளில்‌ இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென அறிவுறுத்தப்படுகிறார்கள்‌.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!