தமிழகத்தில் 9 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும் – வானிலை அறிக்கை!

0
தமிழகத்தில் 9 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும் - வானிலை அறிக்கை!
தமிழகத்தில் 9 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும் - வானிலை அறிக்கை!
தமிழகத்தில் 9 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும் – வானிலை அறிக்கை!

உள் தமிழ்நாட்டில் நிலவும் மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் 9 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வானிலை அறிக்கை:

இன்று (ஜூலை 5) சேலம், தர்மபுரி, விழுப்புரம், திருவண்ணாமலை, கடலூர், அரியலூர், பெரம்பலூர், தேனி, திண்டுக்கல் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. 06.07.2021 அன்று வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.

அமேசான் CEO பதவியில் இருந்து விலகும் ஜெஃப் பெசோஸ் – புதிய அதிகாரி இன்று பதவியேற்பு!

ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 07.07.2021 அன்று மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழையும், கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

08.07.2021 மற்றும் 09.07.2021 ஆகிய தினங்களில் தமிழகம், புதுவை காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பிற்பகலில் ஓரளவு மேகமூட்டத்துடனும் நகரின் சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 37 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.

TN Job “FB  Group” Join Now

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் மாலை மற்றும் இரவு நேரங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 37 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும். தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் குடவாசல் 12 செமீ, பாலவிடுதி, சேலம், அணைமடுவு அணை தலா 10 செமீ, பெனுகொண்டாபுரம், மணப்பாறை, மங்களபுரம், மணல்மேடு, கள்ளந்திரி தலா 9 செமீ மழை பதிவாகியுள்ளது. அதேபோல் பெரம்பலூர், கயத்தாறு, வானமாதேவி தலா 8 செமீ, பாடாலூர், ஹரூர், அரவக்குறிச்சி, முகையூர் தலா 7 செமீ, காங்கேயம், நாமக்கல், இல்லையாங்குடி, ஆலங்காயம் தலா 6 செமீ மழை பதிவாகியுள்ளது.

மீனவர்களுக்கு எச்சரிக்கை:

வங்கக்கடல் பகுதிகள்:

07.07.2021 அன்று தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40-50 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும். 08.07.2021 மற்றும் 09.07.2021 ஆகிய தினங்களில் தமிழக கடலோர பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு ஆந்திர கடலோர பகுதிகள், குமரிக்கடல் பகுதிகள், தெற்கு மற்றும் மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40-50 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

அரபிக்கடல் பகுதிகள்:

08.07.2021, 09,07,2021 ஆகிய தினங்களில் தென் கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகள், கேரளா, கர்நாடக கடலோர பகுதிகள் மற்றும் லட்சத்தீவு பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40-50 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும். 05.07.2021 முதல் 09.07.2021 வரை தென் மேற்கு, மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40-50 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும். எனவே மீனவர்கள் இப்பகுதிக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!