தமிழகத்தின் 5 மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்க்கும் – சென்னை வானிலை மையம் அறிக்கை!

0
தமிழகத்தின் 5 மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்க்கும் - சென்னை வானிலை மையம் அறிக்கை!
தமிழகத்தின் 5 மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்க்கும் - சென்னை வானிலை மையம் அறிக்கை!
தமிழகத்தின் 5 மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்க்கும் – சென்னை வானிலை மையம் அறிக்கை!

தமிழகத்தில் மேற்குதிசை காற்றின்‌ வேக மாறுபாடு காரணமாக, இன்றும், நாளையும் தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. நீலகிரி, கோயம்புத்தூர்‌, திருப்பூர்‌, தேனி மற்றும்‌ திண்டுக்கல்‌ மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

05.07.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஒருசில இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. நீலகிரி, கோயம்புத்தூர்‌, திருப்பூர்‌, தேனி மற்றும்‌ திண்டுக்கல்‌ மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

06.07.2022, 07.07.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஒருசில இடங்களில்‌ லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. நீலகிரி, கோயம்புத்தூர்‌, திருப்பூர்‌, தேனி மற்றும்‌ மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்இற்கு வானம்‌ ஓரளவு மேகமூட்டத்துடன்‌ காணப்படும்‌. நகரின்‌ ஒருசில பகுதிகளில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசான / மிதமான மழை பெய்யக்கூடும்‌. அதிகபட்ச வெப்பநிலை 35-36 டிகிரி செல்சியஸ்‌ மற்றும்‌ குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸ்‌ அளவில்‌ இருக்கக்கூடும்‌.

மீனவர்களுக்கான எச்சரிக்கை:

03.07.2022 குமரிக்கடல்‌ பகுதி, மன்னார்‌ வளைகுடா, தமிழக – ஆந்திர கடலோரப் பகுதிகள்‌ மற்றும்‌ அதனை ஒட்டிய தென்மேற்கு மற்றும்‌ மத்திய மேற்கு வங்கக்கடல்‌ பகுதிகளில்‌ சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல்‌ 50 கிலோ மீட்டர்‌ வேகத்திலும்‌ இடையிடையே 60 கிலோ மீட்டர்‌ வேகத்திலும்‌ வீசக்கூடும்‌.

Exams Daily Mobile App Download

04.07.2022, 05.07.2022: குமரிக்கடல்‌ பகுதி, மன்னார்‌ வளைகுடா, தமிழக-ஆந்திர கடலோரப் பகுஇகள்‌ மற்றும்‌ அதனை ஒட்டிய தென்மேற்கு மற்றும்‌ மத்திய மேற்கு வங்கக்கடல்‌ பகுதிகளில்‌ பலத்தக் காற்று மணிக்கு 40 முதல்‌ 50 கிலோ மீட்டர்‌ வேகத்திலும்‌ இடையிடையே 60 கிலோ மீட்டர்‌ வேகத்திலும்‌ வீசக்கூடும்‌.

03.07.2022 முதல்‌ 07.07.2022 வரை: இலட்சத்தீவு பகுதி, கர்நாடகா – கேரளா கடலோரப்‌ பகுதிகள்‌ மற்றும்‌ அதனை ஒட்டிய தென்கிழக்கு, மத்திய கிழக்கு அரபிக்கடல்‌ பகுதிகளில்‌ சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல்‌
50 இலோ மீட்டர்‌ வேகத்திலும்‌ இடையிடையே 60 கிலோ மீட்டர்‌ வேகத்திலும்‌ வீசக்கூடும்‌.

மேற்குறிப்பிட்ட நாட்களில்‌ மீனவர்கள்‌ இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!