தமிழகத்தின் இந்த மாவட்டங்களில் ஆகஸ்ட் 2 வரை மழைக்கு வாய்ப்பு – வானிலை அறிக்கை!

0
தமிழகத்தின் இந்த மாவட்டங்களில் ஆகஸ்ட் 2 வரை மழைக்கு வாய்ப்பு - வானிலை அறிக்கை!
தமிழகத்தின் இந்த மாவட்டங்களில் ஆகஸ்ட் 2 வரை மழைக்கு வாய்ப்பு - வானிலை அறிக்கை!
தமிழகத்தின் இந்த மாவட்டங்களில் ஆகஸ்ட் 2 வரை மழைக்கு வாய்ப்பு – வானிலை அறிக்கை!

தென்மேற்கு பருவக்காற்று காரணமாக தமிழ்நாட்டில்‌ 29.07.2021, 30.07.2021: கோயம்புத்தூர், நீலகிரி, மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. ஏனைய மாவட்டங்களில்‌ பெரும்பாலும்‌ வறண்ட வானிலை நிலவக்‌ கூடும்‌.

31.07.2021: கோயம்புத்தூர், நீலகிரி மற்றும்‌ தென்‌ கடலோர மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ லேசான மழை பெய்யக்கூடும்‌. ஏனைய மாவட்டங்களில்‌ பெரும்பாலும்‌ வறண்ட வானிலை நிலவக்‌ கூடும்‌.

01.08.2021, 02.08.2021 மேற்கு தொடர்ச்‌சி மலையை ஓட்டிய (கோயம்புத்தூர், நீலகிரி, தேனி, திண்டுக்கல்‌, தென்காசி) மாவட்டங்கள்‌, கடலோர மாவட்டங்கள்‌, புதுச்சேரி மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. ஏனைய மாவட்டங்களில்‌ பெரும்பாலும்‌ வறண்ட வானிலை நிலவக்‌ கூடும்‌.

TN Job “FB  Group” Join Now

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம்‌ ஓரளவு மேகமூட்டத்துடனும்‌, அதிகபட்ச வெப்பநிலை 36 மற்றும்‌ குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்‌சியஸை ஓட்டி இருக்கும்‌.

மீனவர்களுக்கான எச்சரிக்கை :

வங்கக்கடல்‌ பகுதிகள்‌:

29.07.2021: மன்னார்‌ வளைகுடா பகுதிகளில்‌ பலத்த காற்று மணிக்கு 35 முதல்‌ 45 கிலோமீட்டர்‌ வேகத்தில்‌ வீசக்கூடும்‌. மீனவர்கள்‌ இப்பகுதிகளுக்கு எச்சரிக்கையுடன்‌ செல்ல அறிவுறுத்தப்படுகிறார்கள்‌.

29.07.2021, 30.07.2021: வடக்கு வங்கக்‌ கடல்‌ பகுதிகளில்‌ பலத்த காற்று மணிக்கு 45 முதல்‌ 55 கிலோமீட்டர்‌ வேகத்திலும்‌ இடைஇடையே 65 கிலோமீட்டர்‌ வேகத்திலும்‌ வீசக்கூடும்‌. மீனவர்கள்‌ இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென அறிவுறுத்தப்படுகிறார்கள்‌.

அரபிக்கடல்‌ பகுதிகள்‌:

29.07.2021 முதல்‌ 02.08.2021 வரை: தென்‌ மேற்கு, வடக்கு மற்றும்‌ மத்திய அரபிக்கடல்‌ பகுதிகளில்‌ பலத்த காற்று மணிக்கு 40 முதல்‌ 50 கிலோமீட்டர்‌ வேகத்தில்‌ வீசக்கூடும்‌. மீனவர்கள்‌ இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென அறிவுறுத்தப்படுகிறார்கள்‌.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!