தமிழகத்தின் 7 மாவட்டங்களில் மார்ச் 3 வரை இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு – வானிலை அறிக்கை!

0
தமிழகத்தின் 7 மாவட்டங்களில் மார்ச் 3 வரை இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு - வானிலை அறிக்கை!
தமிழகத்தின் 7 மாவட்டங்களில் மார்ச் 3 வரை இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு - வானிலை அறிக்கை!
தமிழகத்தின் 7 மாவட்டங்களில் மார்ச் 3 வரை இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு – வானிலை அறிக்கை!

தமிழகத்தில் இன்று முதல் வருகின்ற மார்ச் 3 ஆம் தேதி வரை உள்ள வானிலை தகவல் குறித்த அறிக்கையை சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

வானிலை அறிக்கை:

தமிழகம் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் 28.02.2022, 01.03.2022 ஆகிய தினங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையை நிலவும். தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் அடுத்த 24 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது. அதன் காரணமாக, வருகிற மார்ச் 2 ஆம் தேதி தென் கடலோர மாவட்டங்களான, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

BSNL ரூ.200க்கு கீழ் இருக்கும் ரீசார்ஜ் திட்டம் – 100 நாள் வரை வேலிடிட்டி! வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு!

மார்ச் 3ஆம் தேதி தமிழகம் மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கடலூர் விழுப்புரம், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, வேலூர், ராணி கோட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை மாவட்டங்கள் மற்றும் புதுவை பகுதியில் ஒரு சில இடங்களில் கன முதல் மிக கன மழையும், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர் மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

அடுத்தாக மார்ச் 4 ஆம் தேதி தமிழகம் மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கடலூர் விழுப்புரம், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, வேலூர், ராணி கோட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை மாவட்டங்கள் மற்றும் புதுவை பகுதியில் ஒரு சில இடங்களில் கன முதல் மிக கன மழையும். தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 23 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும். கடந்த 24 மணி நேரத்தில் மழை சென்டிமீட்டரில் அளவில் ஒன்றும் பதிவு ஆகவில்லை. மேலும் மீனவர்களுக்கு எச்சரிக்கையும் தரப்பட்டு உள்ளது. அதில், இன்று தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்திலும் இடையே மணிக்கு 60 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

அதனை தொடர்ந்து மார்ச் 1 ஆம் தேதி தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்திலும் இடையே மணிக்கு 60 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மார்ச் 2 ஆம் தேதி தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்திலும் இடையே மணிக்கு 60 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மார்ச் 3ஆம் தேதி தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோர பகுதிகள் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்திலும் இடையே மணிக்கு 60 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

தரிசன டிக்கெட் இருந்தால் மட்டுமே திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்குள் அனுமதி – தேவஸ்தானம் அதிரடி உத்தரவு!

கடைசியாக மார்ச் 4ஆம் தேதி தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய வடதமிழக கடலோர பகுதிகள் மற்றும் தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்திலும் இடையே மணிக்கு 60 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் எனவே மீனவர்கள் மேலே கூறியுள்ள பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். இதனை சென்னை மண்டல வானிலை ஆய்வு மைய தலைவர் பா. செந்தாமரை கண்ணன் கூறியுள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here