தமிழகத்தின் 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – இன்றைய வானிலை அறிக்கை!

0
தமிழகத்தின் 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு - இன்றைய வானிலை அறிக்கை!
தமிழகத்தின் 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு - இன்றைய வானிலை அறிக்கை!
தமிழகத்தின் 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – இன்றைய வானிலை அறிக்கை!

வளிமண்டல கீழடுக்கு சுழற்சியின்‌ காரணமாக தமிழகத்தில் 9 மாவட்டங்கள் மற்றும் டெல்டா பகுதிகளில் இலேசான முதல்‌ மிதமான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

வானிலை தகவல்‌

21.02.2022: கேரள கடலோர பகுதிகள்‌ மேல்‌ நிலவும்‌ வளிமண்டல கீழடுக்கு சுழற்சியின்‌ காரணமாக தென்‌ தமிழக மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ இலேசான முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌.

22.02.2022: மேற்கு தொடர்ச்சி மலையை ஓட்டிய மாவட்டங்களில்‌ (கோயம்புத்தூர்‌, நீலகிரி, திருப்பூர்‌, திண்டுக்கல்‌, தேனி, விருதுநகர்‌, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமாரி) ஓரிரு இடங்களில்‌ இலேசான முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌.

TCS, Infosys, Wipro நிறுவன ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு – முடிவுக்கு வரும் WORK FROM HOME!

23.02.2022: தென்‌ தமிழக மாவட்டங்கள்‌, டெல்டா மாவட்டங்கள்‌, புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ இலேசான முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌

24.02.2022: தென்‌ தமிழக கடலோர மாவட்டங்கள்‌ மற்றும்‌ தென்காசி மாவட்டத்தில்‌ ஓரிரு இடங்களில்‌ இலேசான முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌.

25.02.2022: தென்‌ தமிழக கடலோர மாவட்டங்கள்‌, அதனை ஓட்டிய உள்மாவட்டங்கள்‌, டெல்டா மாவட்டங்கள்‌, புதுக்கோட்டை, கடலூர்‌ மற்றும்‌ புதுவை, காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ இலேசான முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌.

மூடுபனி எச்சரிக்கை :

அடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழகம்‌ மற்றும்‌ புதுவை, காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ காலை வேளையில்‌ இலேசான பனிமூட்டம்‌ காணப்படும்‌.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம்‌ ஓரளவு மேகமூட்டத்துடன்‌ காணப்படும்‌. காலை வேளையில்‌ லேசான பனி மூட்டம்‌ காணப்படும்‌ அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி செல்சியஸ்‌ மற்றும்‌ குறைந்தபட்ச வெப்பநிலை 23 டிகிரி செல்‌சியஸை ஓட்டி இருக்கும்‌.

மார்ச் 1ம் தேதியன்று பொது விடுமுறை அறிவிப்பு – அரசு உத்தரவு!

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம்‌ ஓரளவு மேகமூட்டத்துடன்‌ காணப்படும்‌. அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி செல்சியஸ்‌ மற்றும்‌ குறைந்தபட்ச வெப்பநிலை 23 டிகிரி செல்‌சியஸை ஓட்டி இருக்கும்‌.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here