தமிழகத்தில் 8 மாவட்டங்களில் இடி, மின்னனுடன் கூடிய கனமழை கொட்டித் தீர்க்கும் – வானிலை அறிக்கை!

0
தமிழகத்தில் 8 மாவட்டங்களில் இடி, மின்னனுடன் கூடிய கனமழை கொட்டித் தீர்க்கும் - வானிலை அறிக்கை!
தமிழகத்தில் 8 மாவட்டங்களில் இடி, மின்னனுடன் கூடிய கனமழை கொட்டித் தீர்க்கும் - வானிலை அறிக்கை!
தமிழகத்தில் 8 மாவட்டங்களில் இடி, மின்னனுடன் கூடிய கனமழை கொட்டித் தீர்க்கும் – வானிலை அறிக்கை!

குமரிக்கடல்‌ பகுதியின் மேல்‌ நிலவும்‌ வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு இடிமின்னலுடன்‌ கூடிய கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

வானிலை தகவல்:

12.02.2022: தென்‌ தமிழக மாவட்டங்களில்‌ ஒருசில இடங்களிலும்‌, வடகடலோர மாவட்டங்கள்‌, திருச்சிராப்பள்ளி, அரியலூர்‌, பெரம்பலூர்‌ மாவட்டங்கள்‌ மற்றும்‌ புதுவை, காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய இலேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, ராமநாதபுரம்‌ மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ இடிமின்னலுடன்‌ கூடிய கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. ஏனைய மாவட்டங்களில்‌ பெரும்பாலும்‌ வறண்ட வானிலையே நிலவும்‌.

IPL 2022 : அதிக விலைக்கு ஷ்ரேயாஸ் ஐயரை ஏலம் எடுத்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ்! ரசிகர்கள் உற்சாகம்!

13.02.2022: தென்‌ தமிழக மாவட்டங்களில்‌ ஒரு சில இடங்களிலும்‌, நீலகிரி, கோவை திருப்பூர்‌ மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களிலும்‌ இடி மின்னலுடன்‌ கூடிய இலேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. ஏனைய மாவட்டங்கள்‌ மற்றும்‌ புதுவை, காரைக்கால்‌ பகுதிகளில்‌ பெரும்பாலும்‌ வறண்ட வானிலையே நிலவும்‌.

14.02.2022: கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும்‌ தென்காசி மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ இலேசான மழை பெய்யக்கூடும்‌. ஏனைய மாவட்டங்கள்‌ மற்றும்‌ புதுவை, காரைக்கால்‌ பகுதிகளில்‌ பெரும்பாலும்‌ வறண்ட வானிலையே நிலவும்‌.

15.02.2022,16.02.2022: தமிழகம்‌ மற்றும்‌ புதுவை, காரைக்கால்‌ பகுதிகளில்‌ பெரும்பாலும்‌ வறண்ட வானிலையே நிலவும்‌.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம்‌ பொதுவாக மேகமூட்டத்துடன்‌ காணப்படும்‌. நகரின்‌ ஒருசில இடங்களில்‌ இலேசான மழை பெய்யக்கூடும்‌. அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸ்‌ மற்றும்‌ குறைந்தபட்ச வெப்பநிலை 23 டிகிரி செல்‌சயஸை ஓட்டி இருக்கும்‌

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம்‌ ஓரளவு மேகமூட்டத்துடன்‌ காணப்படும்‌. அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சியஸ்‌ மற்றும்‌ குறைந்தபட்ச வெப்பநிலை 23 டிகிரி செல்‌சியஸை ஓட்டி இருக்கும்‌.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!