தமிழகத்தின் 5 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் – வானிலை அறிக்கை!

0
தமிழகத்தின் 5 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் - வானிலை அறிக்கை!
தமிழகத்தின் 5 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் - வானிலை அறிக்கை!
தமிழகத்தின் 5 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் – வானிலை அறிக்கை!

தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு ஒரு ஒரு சில இடங்களில் லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வானிலை தகவல்‌

07.12.2021: மேற்கு தொடர்ச்சி மலையை ஓட்டிய மாவட்டங்கள்‌ மற்றும்‌ தென்‌ மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌

08.12.2021: கடலூர்‌, ராமநாதபுரம்‌, புதுக்கோட்டை, டெல்டா மாவட்டங்கள்‌ மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய கன மழையும்‌, கடலோர மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய மிதமான மழையும்‌, ஏனைய மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ லேசான மழையும்‌ பெய்யக்கூடும்‌.

போலீசாருக்கு ஆண்டு சீருடைப்படியாக ரூ.10,000 வழங்கப்படும் – அரசு ஒப்புதல்!

09.12.2021: அரியலூர்‌, பெரம்பலூர்‌, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, தூத்துக்குடி மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய கன மழையும்‌, ஏனைய மாவட்டங்கள்‌ மற்றும்‌ புதுவை, காரைக்கால்‌ பகுதிகளில்‌ அநேக இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழையும்‌ பெய்யக்கூடும்‌.

10.12.2021, 11.12.2021: கடலோர மாவட்டங்கள்‌ மற்றும்‌ அதனை ஓட்டிய உள்‌ மாவட்டங்களில்‌ ஒரு சில இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மமை பெய்யக்கூடும்‌.

தமிழக அரசு ஆசிரியர்கள் கவனத்திற்கு – ஜனவரியில் இடமாறுதல் கவுன்சிலிங்!

சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு. வானம்‌ ஓரளவு மேக மூட்டத்துடன்‌ காணப்படும்‌. அதிகபட்ச வெப்பநிலை 32 மற்றும்‌ குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்‌சயஸை ஒட்டி இருக்கும்‌. அடுத்த 48 மணி நேரத்திற்கு. வானம்‌ ஓரளவு மேகமூட்டத்துடன்‌ காணப்படும்‌. நகரின்‌ ஒரு சில இடங்களில்‌ லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. அதிகபட்ச வெப்பநிலை 31 மற்றும்‌ குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்‌சயஸை ஓட்டி இருக்கும்‌.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!