தமிழகத்தின் 7 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும் – சென்னை வானிலை மையம் அறிக்கை!

0
தமிழகத்தின் 7 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும் - சென்னை வானிலை மையம் அறிக்கை!
தமிழகத்தின் 7 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும் - சென்னை வானிலை மையம் அறிக்கை!
தமிழகத்தின் 7 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும் – சென்னை வானிலை மையம் அறிக்கை!

தென்‌ தமிழக பகுதிகளில்‌ நிலவும்‌ வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக டிசம்பர் 8ம் தேதி வரை மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும் மீனவர்களுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வானிலை தகவல்:

04.12.2021: திருநெல்வேலி, தூத்துக்குடி, மதுரை, சேலம்‌, நாமக்கல்‌, கோயம்புத்தூர்‌, கன்னியாகுமரி மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய கன மழையும்‌, ஏனைய தென்‌ மாவட்டங்கள்‌, மேற்கு தொடர்ச்‌சி மலையை ஒட்டிய மாவட்டங்கள்‌ மற்றும்‌ அதனை ஓட்டிய உள்‌ மாவட்டங்களில்‌ அநேக இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய மிதமான மழையும்‌, வட கடலோர மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ லேசான மழையும்‌ பெய்யக்கூடும்‌.

05.12.2021: கன்னியாகுமரி, திருநெல்வேலி, மதுரை, தென்காசி , திருச்‌சராப்பள்ளி, சேலம்‌, நாமக்கல்‌, கோயம்புத்தூர்‌, ஈரோடு, தர்மபுரி, திருவண்ணாமலை, நீலகிரி திருப்பூர்‌ மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய கன மழையும்‌, ஏனைய மாவட்டங்களில்‌ அநேக இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய மிதமான மழையும்‌, வட கடலோர மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ லேசான மழையும்‌ பெய்யக்கூடும்‌.

இந்தியாவில் ஓமைக்ரான் தொற்றால் 3வது அலைக்கு வாய்ப்பு? WHO விளக்கம்!

06.12.2021: மேற்கு தொடர்ச்‌சி மலையை ஓட்டிய மாவட்டங்கள்‌ மற்றும்‌ அதனை ஒட்டிய உள்‌ மாவட்டங்களில்‌ ஒரு சில இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய மிதமான மழையும்‌, வட கடலோர மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ லேசான மழையும்‌ பெய்யக்கூடும்‌.

07.12.2021: தமிழ்நாட்டில்‌ ஓரிரு இடங்களில்‌ லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌.

08.12.2021: தூத்துக்குடி, ராமநாதபுரம்‌ மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய கன மழையும்‌, கடலோர மாவட்டங்கள்‌ மற்றும்‌ அதனை ஓட்டிய உள்‌ மாவட்டங்கள்‌, புதுவை, காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஒரு சில இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய மிதமான மழையும்‌, மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள்‌, ஏனைய மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ லேசான மழையும்‌ பெய்யக்கூடும்‌.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு. வானம்‌ ஓரளவு மேக மூட்டத்துடன்‌ காணப்படும்‌. அதிகபட்ச வெப்பநிலை 32 மற்றும்‌ குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்‌சியஸை ஒட்டி இருக்கும்‌.

மீனவர்களுக்கான எச்சரிக்கை:

வங்க கடல்பகுதிகள்‌

மத்திய மேற்கு வங்கக்‌ கடல்‌ பகுதியில்‌ நிலவும்‌ புயல்‌ அடுத்த 12 மணி நேரத்தில்‌ வலுவிழந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக ஒரிசா கடற்கரையோரம்‌ நிலைகொள்ளும்‌.

04.12.2021: மத்திய மேற்கு வங்கக்‌ கடல்‌ பகுதி வடக்கு ஆந்திரா மற்றும்‌ ஒரிசா கடலோர பகுதிகளில்‌ புயல்‌ காற்று மணிக்கு 60 முதல்‌ 70 கிலோ மீட்டர்‌ வேகத்திலும்‌, இடையிடையே 80 கிலோ மீட்டர்‌ வேகத்திலும்‌ வீசக்கூடும்‌.

கொரோனா தடுப்பூசிகளுக்கு காலாவதி காலம் – மத்திய மருந்து தரக்கட்டுப்பாட்டு அமைப்பு நிர்ணயம்!

05.12.2021: மத்திய மேற்கு வங்கக்‌ கடல்‌ பகுதி, ஆந்திரா மற்றும்‌ ஒரிசா கடலோர பகுதிகளில்‌ புயல்‌ காற்று மணிக்கு 5௦ முதல்‌ 60 கிலோ மீட்டர்‌ வேகத்துலும்‌, இடையிடையே 70 கிலோ மீட்டர்‌ வேகத்துலும்‌ வீசக்கூடும்‌. மீனவர்கள்‌ இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம்‌ என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்‌.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!