தமிழகத்தில் டிச.5 வரை கனமழை நீடிக்கும், மீனவர்களுக்காக எச்சரிக்கை – வானிலை ஆய்வு மையம் அறிக்கை!

0
தமிழகத்தில் டிச.5 வரை கனமழை நீடிக்கும், மீனவர்களுக்காக எச்சரிக்கை - வானிலை ஆய்வு மையம் அறிக்கை!
தமிழகத்தில் டிச.5 வரை கனமழை நீடிக்கும், மீனவர்களுக்காக எச்சரிக்கை - வானிலை ஆய்வு மையம் அறிக்கை!
தமிழகத்தில் டிச.5 வரை கனமழை நீடிக்கும், மீனவர்களுக்காக எச்சரிக்கை – வானிலை ஆய்வு மையம் அறிக்கை!

அந்தமான்‌ கடல்‌ பகுதியில்‌ நிலவும்‌ காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தில் அடுத்த 4 நாட்களக்குக்கு மழை பெய்யும் வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது

வானிலை தகவல்‌

01.12.2021: தமிழ்நாடு மற்றும்‌ புதுவை, காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌.

02.12.2021: மேற்கு தொடர்ச்‌சி மலையை ஒட்டிய மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ லேசானது முதல்‌ மிதமான மழையும்‌, ஏனைய மாவட்டங்கள்‌ மற்றும்‌ புதுவை, காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ லேசான மழையும்‌ பெய்யக்கூடும்‌.

03.12.2021: தென்மாவட்டங்கள்‌, மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள்‌ மற்றும்‌ அதனை ஓட்டிய உள்‌ மாவட்டங்களில்‌ ஒரு சில இடங்களில்‌ மிதமான மழையும்‌, கடலோர மாவட்டங்கள்‌ மற்றும்‌ புதுவை, காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ லேசான மழையும்‌ பெய்யக்கூடும்‌.

தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கான பொங்கல் பரிசு 2022 – அரசு விளக்கம்!

04.12.2021, 05.12.2021: தென்‌ மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய கன மழையும்‌, கடலோர மாவட்டங்கள்‌ மற்றும்‌ அதனை ஓட்டிய உள்‌ மாவட்டங்கள்‌ மற்றும்‌ புதுவை, காரைக்கால்‌ பகுதிகளில்‌ அனேக இடங்களில்‌ லேசானது முதல்‌ மிதமான மழையும்‌ பெய்யக்கூடும்‌

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்ததிற்கு. நகரின்‌ ஓரிரு இடங்களில்‌ லேசானது மழை
பெய்யக்கூடும்‌. அதிகபட்ச வெப்பநிலை 31 மற்றும்‌ குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்‌சியஸை ஓட்டி இருக்கும்‌.

மீனவர்களுக்கான எச்சரிக்கை:

வங்க கடல்‌ பகுதிகள்‌

தற்பொழுது அந்தமான்‌ கடல்‌ பகுதியில்‌ நிலவும்‌ காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு வடமேற்கு திசையில்‌ நகர்ந்து நாளை காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும்‌, அதனைத்‌ தொடர்ந்து 24 மணி நேரத்தில்‌ புயலாக வலுப்பெற்று மத்திய வங்கக்‌ கடல்‌ பகுதிக்கு நகரக்‌ கூடும்‌. இது மேலும்‌ வடமேற்கு திசையில்‌ நகர்ந்து சற்று
வலுப்பெற்று வடக்கு ஆந்திரா தெற்கு ஓரிசா கரையை வரும்‌ 4ஆம்‌ தேதி காலை நெருங்க கூடும்‌.

01.12.2021: அந்தமான்‌ கடல்‌ பகுத மற்றும்‌ அதனை ஓட்டிய தென்‌ கிழக்கு வங்க கடல்‌ பகுதியில்‌ சூறாவளி காற்று மணிக்கு 45 முதல்‌ 55 கிலோ மீட்டர்‌ வேகத்ததிலும்‌, இடையிடையே 65 கிலோ மீட்டர்‌ வேகத்திலும்‌ வீசக்கூடும்‌.

சென்னையில் தனியார் வேலைவாய்ப்பு 2021 – கொட்டிக்கிடக்கும் காலிப்பணியிடங்கள்..!

02.12.2021: தென்‌கிழக்கு மற்றும்‌ அதனை ஒட்டிய மத்திய கிழக்கு வங்க கடல்‌, அந்தமான்‌ கடல்‌ பகுதிகளில்‌ சூறாவளி காற்று மணிக்கு 50 முதல்‌ 60 கிலோ மீட்டர்‌ வேகத்திலும்‌ இடையிடையே 70 கிலோ மீட்டர்‌ வேகத்திலும்‌,

03.12.2021: மத்திய வங்கக்‌ கடல்‌ பகுதியில்‌ புயல்‌ காற்று மணிக்கு 65 கிலோ மீட்டர்‌ முதல்‌ 75 கிலோ மீட்டர்‌ வேகத்துலும்‌ இடையிடையே 85 கிலோ மீட்டர்‌ வேகத்திலும்‌ வீசக்கூடும்‌. ஆந்திரா மற்றும்‌ ஓரிசா கடலோர பகுதிகளில்‌ சூறாவளி காற்று மணிக்கு 45 முதல்‌ 55 கிலோ மீட்டர்‌ வேகத்துலும்‌ இடையிடையே 65 கிலோ மீட்டர்‌ வேகத்துலும்‌ வீசக்கூடும்‌.

04.12.2021: வடமேற்கு மற்றும்‌ மத்‌திய மேற்கு வங்கக்‌ கடல்‌ பகுதிகளில்‌ புயல்‌ காற்று மணிக்கு 90 கிலோ மீட்டர்‌ முதல்‌ 100 கிலோ மீட்டர்‌ வேகத்துலும்‌ இடையிடையே 110 கிலோ மீட்டர்‌ வேகத்திலும்‌ வீசக்கூடும்‌. வடக்கு ஆந்திரா , ஒரிசா கடலோர பகுதிகளில்‌ சூறாவளி காற்று மணிக்கு 70 முதல்‌ 80 கிலோ மீட்டர்‌ வேகத்திலும்‌
இடையிடையே 90 கிலோ மீட்டர்‌ வேகத்திலும்‌ வீசக்கூடும்‌, மத்‌திய மேற்கு வங்க கடல்‌ பகுதியில்‌ புயல்‌ காற்று மணிக்கு 60 முதல்‌ 70 கிலோ மீட்டர்‌ வேகத்துலும்‌ இடையிடையே 80 கிலோ மீட்டர்‌ வேகத்திலும்‌ வீசக்கூடும்‌. மீனவர்கள்‌ இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம்‌ என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்‌

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!