தமிழகத்தில் ஆகஸ்ட் 13 வரை கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள் – வானிலை அறிக்கை!

0
தமிழகத்தில் ஆகஸ்ட் 13 வரை கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள் - வானிலை அறிக்கை!
தமிழகத்தில் ஆகஸ்ட் 13 வரை கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள் - வானிலை அறிக்கை!
தமிழகத்தில் ஆகஸ்ட் 13 வரை கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள் – வானிலை அறிக்கை!

வளிமண்டல மேலடுக்கு சுழற்‌சி மற்றும்‌ வெப்பச்சலனம்‌ காரணமாக தமிழ்நாட்டில்‌ இன்று நீலகிரி, கோயம்புத்தூர்‌ மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ கன மழையும்‌, சேலம்‌, நாமக்கல்‌, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, திருவள்ளூர்‌ மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய கன மழையும்‌, ஏனைய மேற்கு தொடர்ச்‌சி மலையை ஒட்டிய மாவட்டங்கள்‌, உள்‌ மாவட்டங்கள்‌, கடலோர மாவட்டங்கள்‌ மற்றும்‌ புதுவை, காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஒரு சில இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழையும்‌ பெய்ய கூடும்‌.

10.08.2021: நீலகிரி, கோயம்புத்தூர்‌, தேனி மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ கன மழையும்‌, அரியலூர்‌, பெரம்பலூர்‌, கடலூர்‌, விழுப்புரம்‌, நாகப்பட்டினம்‌, மயிலாடுதுறை மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய கன மழையும்‌, ஏனைய மேற்கு தொடர்ச்‌சி மலையை ஓட்டிய மாவட்டங்கள்‌, உள்‌ மாவட்டங்கள்‌, கடலோர மாவட்டங்கள்‌ மற்றும்‌ புதுவை, காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஒரு சில இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழையும்‌ பெய்ய கூடும்‌.

ஆகஸ்ட் 16 முதல் +2 மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு – மாநில அரசு அறிவிப்பு!

11.08.2021: நீலகிரி, கோயம்புத்தார்‌, தேனி மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ கன மழையும்‌, சேலம்‌, நாமக்கல்‌, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, கடலூர்‌, நாகப்பட்டினம்‌, மயிலாடுதுறை, தஞ்சாவூர்‌, திருவாரூர்‌ மற்றும்‌ புதுவை பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய கன மழையும்‌, ஏனைய மாவட்டங்கள்‌ மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ பெரும்பாலான இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழையும்‌ பெய்யக்கூடும்‌.

12.08.2021 & 13.08.2021: நீலகிரி, கோயம்புத்தூர்‌, தேனி மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ கன மழையும்‌, கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர்‌, சேலம்‌, கடலூர்‌, விழுப்புரம்‌ மற்றும்‌ டெல்டா மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய கன மமையும்‌, ஏனைய மாவட்டங்கள்‌ மற்றும்‌ புதுவை, காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஒரு சில இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்குற்கு வானம்‌ ஓரளவு மேகமூட்டத்துடன்‌ காணப்படும்‌, நகரின்‌ ஒருசில பகுதிகளில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. அதிகபட்ச வெப்பநிலை 38 மற்றும்‌ குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்‌சியஸை ஓட்டி இருக்கும்‌.

அடுத்த 48 மணி நேரத்குற்கு வானம்‌ ஓரளவு மேகமூட்டத்துடன்‌ காணப்படும்‌, நகரின்‌ ஒருசில பகுதிகளில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசான மழை பெய்யக்கூடும்‌. அதிகபட்ச வெப்பநிலை 38 மற்றும்‌ குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்‌.

மீனவர்களுக்கான எச்சரிக்கை :

வங்க கடல்‌ பகுதிகள்‌:

09.08.2021, 10.08.2021: மன்னார்‌ வளைகுடா பகுதிகளில்‌ பலத்த காற்று மணிக்கு 35 முதல்‌ 45 கிலோமீட்டர்‌ வேகத்தில்‌ வீசக்கூடும்‌.

TN Job “FB  Group” Join Now

09.08.2021, 10.08.2021: தென்‌ மேற்கு வங்க கடல்‌ மற்றும்‌ அதனை ஓட்டிய தென்‌கிழக்கு இலங்கை பகுதிகளில்‌ பலத்த காற்று மணிக்கு 35 முதல்‌ 45 கிலோமீட்டர்‌ வேகத்தில்‌ வீசக்கூடும்‌. மீனவர்கள்‌ இப்பகுதிகளுக்கு எச்சரிக்கையுடன்‌ செல்லுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்‌.

அரபிக்கடல்‌ பகுதிகள்‌:

09.08.2021: தென்‌ கிழக்கு அரபிக்கடல்‌, கேரள கடலோர பகுஇகள்‌ மற்றும்‌ லட்சத்தீவு பகுதிகளில்‌ சூறாவளி காற்று மணிக்கு மணிக்கு 40 முதல்‌ 50கிலோமீட்டர்‌ வேகத்தில்‌ வீசக்கூடும்‌.

09.08.2021, 10.08.2021: தென்‌ மேற்கு மற்றும்‌ மத்திய மேற்கு அரபிக்கடல்‌ பகுதிகளில்‌ பலத்த காற்று மணிக்கு 50 முதல்‌ 60 கிலோமீட்டர்‌ வேகத்திலும்‌ இடைஇடையே 70 கிலோமீட்டர்‌ வேகத்திலும்‌ வீசக்கூடும்‌.

11.08.2021 முதல்‌ 13.08.2021 வரை: தென்‌ மேற்கு, மத்‌திய மேற்கு மற்றும்‌ வடக்கு அரபிக்கடல்‌ பகுதிகளில்‌ பலத்த காற்று மணிக்கு 50௦ முதல்‌ 60 கிலோமீட்டர்‌ வேகத்திலும்‌ இடைஇடையே 70 கிலோமீட்டர்‌ வேகத்திலும்‌ வீசக்கூடும்‌. மீனவர்கள்‌ இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென அறிவுறுத்தப்படுகிறார்கள்‌.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!