தமிழகத்தில் 4 நாட்களுக்கு ‘இந்த’ மாவட்டங்களில் மழை பெய்யும் – வானிலை அறிக்கை!

0
தமிழகத்தில் 4 நாட்களுக்கு 'இந்த' மாவட்டங்களில் மழை பெய்யும் - வானிலை அறிக்கை!
தமிழகத்தில் 4 நாட்களுக்கு 'இந்த' மாவட்டங்களில் மழை பெய்யும் - வானிலை அறிக்கை!
தமிழகத்தில் 4 நாட்களுக்கு ‘இந்த’ மாவட்டங்களில் மழை பெய்யும் – வானிலை அறிக்கை!

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும்‌ வெப்பச்சலனம்‌ காரணமாக தமிழ்நாட்டில்‌ இன்று நீலகிரி, கோயம்புத்தூர்‌, கன்னியாகுமரி மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ கன மழையும்‌, ஏனைய மேற்கு தொடர்ச்‌சி மலையை ஓட்டிய (திருப்பூர், தென்காசி) மாவட்டங்களில்‌ ஒரு சில இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய மிதமான மழையும்‌, கடலோர மாவட்டங்கள்‌, உள்‌ மாவட்டங்கள்‌ மற்றும்‌ புதுவை, காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஒரு சில இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழையும்‌ பெய்யக்கூடும்‌.

08.08.2021: கோயம்புத்தூர்‌, தேனி, கன்னியாகுமரி மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ கன மழையும்‌, திண்டுக்கல், மதுரை மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய கன மழையும்‌, ஏனைய மேற்கு தொடர்ச்சி மலையை ஓட்டிய (திருப்பூர், தென்காசி) மாவட்டங்கள்‌ மற்றும்‌ தென்‌ மாவட்டங்களில்‌ ஒருசில இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய மிதமான மழையும்‌, இதர மாவட்டங்கள்‌ மற்றும்‌ புதுவை, காரைக்கால்‌ பகுதிகளில் ஒரு சில இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழையும்‌ பெய்யக்கூடும்‌.

தமிழக தொடக்க கல்வி பட்டயத் தேர்வு – இன்று முதல் விண்ணப்பங்கள் வரவேற்பு!

09.08.2021: கோயம்புத்தூர்‌, நீலகிரி மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ கனமழையும்‌, திருவண்ணாமலை, சேலம்‌, கள்ளக்குறிச்சி, வேலூர்‌ மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய கன மழையும்‌, இதர தமிழக மாவட்டங்கள்‌ மற்றும்‌ புதுவை, காரைக்கால்‌ பகுதிகளில் ஒரு சில இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழையும்‌ பெய்யக்கூடும்‌.

10.08.2021: நீலகிரி, கோயம்புத்தூர்‌ மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ கன மழையும்‌, திருவண்ணாமலை, சேலம்‌, கள்ளக்குறிச்சி, அரியலூர்‌, பெரம்பலூர்‌, கடலூர்‌ மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ இடி மின்னலுடன்‌
கூடிய கன மழையும்‌, இதர தமிழக மாவட்டங்கள்‌ மற்றும்‌ புதுவை, காரைக்கால்‌ பகுதிகளில் ஒரு சில இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழையும்‌ பெய்யக்கூடும்‌.

11.08.2021: மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ கன முதல்‌ மிக கன மழையும்‌, தென்‌ தமிழகம்‌ மற்றும்‌ டெல்டா மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய கன முதல்‌ மிக கன மழையும்‌, இதர தமிழக மாவட்டங்கள்‌ மற்றும்‌ புதுவை, காரைக்கால்‌ பகுதிகளில் ஒருசில இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழையும்‌ பெய்யக்கூடும்‌.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்துற்கு வானம்‌ ஓரளவு மேகமூட்டத்துடன்‌ காணப்படும்‌. நகரின்‌ ஒருசில பகுஇகளில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. அதிகபட்ச வெப்பநிலை 36 மற்றும்‌ குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்‌சியஸை ஒட்டி இருக்கும்‌.

மீனவர்களுக்கான எச்சரிக்கை :

வங்கக்கடல் பகுதிகள்:

07.08.2021: தென்கிழக்கு இலங்கையை ஒட்டிய தென்‌ மேற்கு வங்க கடல்‌ பகுதிகள் பலத்த காற்று மணிக்கு 35 முதல்‌ 45 கிலோமீட்டர் வேகத்தில்‌ வீசக்கூடும்‌.

TN Job “FB  Group” Join Now

மீனவர்கள்‌ இப்பகுதிகளுக்கு எச்சரிக்கையுடன்‌ செல்லுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்‌.

அரபிக்கடல் பகுதிகள்:

07.08.2021 முதல்‌ 11.08.2021 வரை: தென்‌ மேற்கு, வடக்கு மற்றும்‌ மத்திய மேற்கு அரபிக்கடல்‌ பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 50 முதல்‌ 60 கிலோமீட்டர்‌ வேகத்துடனும் இடைஇடையே 70 கிலோமீட்டர் வேகத்துடனும் வீசக்கூடும்‌.

07.08.2021, 08.08.2021, 11.08.2021 வரை: கேரள கடலோரப்‌ பகுதியை ஒட்டிய தென்‌ கிழக்கு அரபிக்கடல்‌ பகுதிகள், லட்சத்தீவு பகுதிகள்‌ கேரளா கர்நாடகா கடலோர பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல்‌ 50 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும்‌.

மீனவர்கள்‌ இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென அறிவுறுத்தப்படுகிறார்கள்‌.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!