தமிழகத்தில் ஆகஸ்ட் 20 வரை மழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள் – வானிலை அறிக்கை!

0
தமிழகத்தில் ஆகஸ்ட் 20 வரை மழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள் - வானிலை அறிக்கை!
தமிழகத்தில் ஆகஸ்ட் 20 வரை மழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள் - வானிலை அறிக்கை!
தமிழகத்தில் ஆகஸ்ட் 20 வரை மழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள் – வானிலை அறிக்கை!

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும்‌ வெப்பச்சலனம்‌ காரணமாக தமிழ்நாட்டில்‌ இன்று சென்னை, காஞ்சிபுரம்‌, திருவள்ளூர்‌, வேலூர்‌, திருப்பத்தூர்‌, ராணிப்பேட்டை, நீலகிரி, கோவை, ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழையும்‌, ஏனைய கடலோர மாவட்டங்கள்‌ மற்றும்‌ புதுவை, காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசான மழையும்‌ பெய்யக்கூடும்‌.

17.08.2021, 18.08.2021:கடலோர மாவட்டங்கள்‌ மற்றும்‌ அதனை ஒட்டிய உள்‌ மாவட்டங்கள்‌, நீலகிரி, கோயம்புத்தூர்‌ மாவட்டங்கள்‌ மற்றும்‌ புதுவை, காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌.

பள்ளிகள் திறப்பு குறித்து ஆகஸ்ட் 20 க்கு பின்னர் முடிவு – கவர்னர் அறிவிப்பு!

19.08.2021, 20.08.2021: கடலோர மாவட்டங்கள்‌, உள்‌ மாவட்டங்கள்‌ மற்றும்‌ புதுவை, காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழையும்‌, மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய (நீலகிரி, கோயம்புத்தூர்‌, தேனி, திண்டுக்கல்‌, திருப்பூர்‌, தென்காசி) மாவட்டங்களில்‌ ஒருசில இடங்களில்‌ லேசானது முதல்‌ மிதமான மழையும்‌ பெய்யக்கூடும்‌.

TN Job “FB  Group” Join Now

சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்துற்கு வானம்‌ பொதுவாக மேகமூட்டத்துடன்‌ காணப்படும்‌, நகரின்‌ ஒருசில பகுதிகளில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. அதிகபட்ச வெப்பநிலை 34 மற்றும்‌ குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்‌சியஸை ஓட்டி இருக்கும்‌.

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம்‌ பொதுவாக மேகமூட்டத்துடன்‌ காணப்படும்‌, நகரின்‌ ஒருசில பகுதிகளில்‌ லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. அதிகபட்ச வெப்பநிலை 34 மற்றும்‌ குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்‌சியஸை ஒட்டி இருக்கும்‌

மீனவர்களுக்கான எச்சரிக்கை:

வங்க கடல்‌ பகுதிகள்:

16.08.2021, 17.08.2021: மத்திய மேற்கு வங்க கடல்‌ மற்றும்‌ அதனை ஒட்டிய ஆந்திர கடலோர பகுதிகள்‌, தென்‌ கிழக்கு வங்க கடல்‌ மற்றும்‌ வடக்கு அந்தமான்‌ கடல்‌ பகுதிகளில்‌ சூறாவளி காற்று மணிக்கு 40 முதல்‌ 50 கிலோமீட்டர்‌ வேகத்தில்‌ வீசக்கூடும்‌. மீனவர்கள்‌ இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென அறிவுறுத்தப்படுகிறார்கள்‌.

16.08.2021, 17.08.2021: குமரிக்கடல்‌, மன்னார்‌ வளைகுடா மற்றும்‌ தென்‌ மேற்கு வங்கக்கடல்‌ ஒட்டிய தென்‌ கிழக்கு இலங்கை பகுதிகளில்‌ பலத்த காற்று மணிக்கு மணிக்கு 35 முதல்‌ 45 கிலோமீட்டர்‌ வேகத்தில்‌ வீசக்கூடும்‌. மீனவர்கள்‌ இப்பகுதிகளுக்கு எச்சரிக்கையுடன்‌ செல்லுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்‌.

அரபிக்கடல்‌ பகுதிகள்‌:

16.08.2021 முதல்‌ 19.08.2021 வரை: தென்‌ மேற்கு மற்றும்‌ மத்திய மேற்கு அரபிக்கடல்‌ பகுதிகளில்‌ பலத்த காற்று மணிக்கு 50 முதல்‌ 60 கிலோமீட்டர்‌ வேகத்திலும்‌ இடைஇடையே 70 கிலோமீட்டர்‌ வேகத்திலும்‌ வீசக்கூடும்‌. மீனவர்கள்‌ இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென அறிவுறுத்தப்படுகிறார்கள்‌.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!