தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு – வானிலை அறிக்கை!

0
தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு - வானிலை அறிக்கை!
தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு - வானிலை அறிக்கை!
தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு – வானிலை அறிக்கை!

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச் சலனம் காரணமாக தமிழகத்தில் 2 மாவட்டங்களில் இடி மின்னலுடன்‌ கூடிய லேசான முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌ என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

வானிலை தகவல்‌:

உள்‌ தமிழக பகுதிகளின்‌ மேல்‌ நிலவும்‌ வளி மண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும்‌ வெப்பச்சலனம்‌ காரணமாக, 04.04.2022, 05.04.2022: தென்‌ தமிழகம்‌, மேற்கு தொடர்ச்‌சி மலைப்பகுதி மாவட்டங்கள்‌ மற்றும்‌ அதனை ஒட்டிய மாவட்டங்கள்‌, டெல்டா மாவட்டங்கள்‌ மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசான முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌.

தமிழகத்துக்கு 11 மாதங்களில் 2.05 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு – முதல்வரின் சூப்பர் அறிவிப்பு!

06.04.2022: மேற்கு தொடர்ச்‌சி மலைப்‌ பகுதி மாவட்டங்கள்‌, டெல்டா மாவட்டங்கள்‌,கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்டங்கள்‌ மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசான முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌.

07.04.2022, 08.04.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசான முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம்‌ ஓரளவு மேகமூட்டத்துடன்‌ காணப்படும்‌. அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ்‌ மற்றும்‌ குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்‌சியஸை ஒட்டி இருக்கக்கூடும்‌.

குறிப்பு: ஏப்ரல்‌ 6ம்‌ தேதி தெற்கு அந்தமான்‌ கடல்‌ மற்றும்‌ அதனை ஒட்டியுள்ள வங்க கடல்‌ பகுதிகளில்‌ ஓர்‌ மேலடுக்கு சுழற்சி உருவாகக்கூடும்‌. அதற்கடுத்த 24 மணி நேரத்தில்‌ தென்‌கிழக்கு வங்க கடல்‌ பகுதிகளில்‌ ஓர்‌ காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும்‌.

மீனவர்களுக்கு எச்சரிக்கை :

06.04.2022: தென்கிழக்கு வங்கக்கடல்‌ மற்றும்‌ அதனை ஒட்டிய தெற்கு அந்தமான்‌ கடல்‌ பகுதிகளில்‌ சூறாவளி காற்று மணிக்கு 40 முதல்‌ 50 கிலோ மீட்டர்‌ வேகத்திலும்‌ இடையிடையே மணிக்கு 6௦ கிலோ மீட்டர்‌ வேகத்திலும்‌ வீசக்கூடும்‌

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!