தமிழகத்தில் 3 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு – வானிலை அறிக்கை!

0
தமிழகத்தில் 3 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு - வானிலை அறிக்கை!
தமிழகத்தில் 3 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு - வானிலை அறிக்கை!
தமிழகத்தில் 3 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு – வானிலை அறிக்கை!

இலங்கை மற்றும்‌ அதனை ஒட்டிய பகுதிகளின்‌ மேல்‌ நிலவும்‌ வளி மண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும்‌ வெப்ப சலனம்‌ காரணமாக 3 மாவட்டங்களில் இடி மின்னலுடன்‌ கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

வானிலை தகவல்‌:

23.04.2022: தமிழகம்‌, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஒரு சில இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. தென் தமிழகம்‌, கோயம்புத்தூர்‌, நீலகிரி மற்றும்‌ திருப்பூர்‌ மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.

24.04.2022: தென்தமிழகம்‌, நீலகிரி, கோயம்புத்தூர்‌, திருப்பூர்‌, ஈரோடு, கரூர்‌, நாமக்கல்‌, சேலம்‌ மற்றும்‌ தர்மபுரி மாவட்டங்களில்‌ ஒரு சில இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌.

25.04.2022, 26.04.2022, 27.04.2022: மேற்கு தொடர்ச்‌சி மலை பகுதி மாவட்டங்கள்‌ மற்றும்‌ அதனை ஒட்டிய மாவட்டங்கள்‌, டெல்டா மாவட்டங்கள்‌ மற்றும்‌ அதனை ஒட்டிய மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌.

ExamsDaily Mobile App Download

சென்னையை பொறுத்தவரை: அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம்‌ ஓரளவு மேகமூட்டத்துடன்‌ காணப்படும்‌. அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ்‌ மற்றும்‌ குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்‌சியஸை ஒட்டி இருக்கக்கூடும்‌.

மீனவர்களுக்கான எச்சரிக்கை: 23.04.2022 – கேரள கடல்‌ பகுதியை ஒட்டிய தென்‌ தமிழ்நாடு – குமரிக்கடல்‌ பகுதிகளில்‌ சூறாவளி காற்று மணிக்கு 40 முதல்‌ 50 கிலோ மீட்டர்‌ வேகத்தில்‌ வீசக்கூடும்‌. மீனவர்கள்‌ இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென அறிவுறுத்தப்படுகிறார்கள்‌.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!