தமிழகத்தில் மிக கனமழை கொட்டி தீர்க்கும் – வானிலை மைய எச்சரிக்கை!
தமிழகத்தில் அடுத்து வரும் சில நாட்கள் மிக கனமழை கொட்டி தீர்க்க வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
கனமழை எச்சரிக்கை:
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் சிதம்பரம் மாவட்டத்தில் அதிகபட்சமாக 6 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. இதேபோல் அதிகபட்சமாக ஈரோடு மாவட்டத்தில் 33.6 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகி உள்ளது. தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்க கடல் பகுதியில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் இன்று பெரும்பாலான இடங்களில் இடி, மின்னலுடன் மழை பெய்யக்கூடும். குறிப்பாக கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தேனி மற்றும திண்டுக்கல் மாவட்டங்களில மிக கனமழை பெய்யும்.
தமிழகத்தில் அனைத்து மதுபான கடைகளையும் மூட நடவடிக்கை – வலுக்கும் கோரிக்கை!!
விருதுநகர், மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, திருப்பூர், கோயம்புத்தூர், நீலகிரி, ஈரோடு, தூத்துக்குடி மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் கன மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் நவம்பர் 9 ம் தேதி வரை பரவலாக பல்வேறு மாவட்டங்களிலும் மழைக்கான எச்சரிக்கை அறிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் தலைநகரான சென்னையில் அடுத்த 24 மணி நேரத்தில் இடி, மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்ய வாய்ப்புகள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மீனவர்களுக்கான எச்சரிக்கை எதுவும் இன்றைய அறிக்கையில் குறிப்பிடப்படவில்லை. பொதுமக்கள் தீவிர மழைக்கான முன்னேற்பாடுகளை கவனித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.