தமிழக ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு பெற உரிமையில்லை – சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

0
தமிழக ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு பெற உரிமையில்லை - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
தமிழக ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு பெற உரிமையில்லை - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
தமிழக ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு பெற உரிமையில்லை – சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

தமிழக அரசு விதித்த உத்தரவின் படி ஆசிரியர்கள் தகுதி தேர்வில் தேர்ச்சி அடைய வேண்டியது அவசியம். இதில் தேர்ச்சி பெறாதவர்கள் ஊதிய உயர்வு பெற மற்றும் பணியில் நீடிக்க தகுதி இல்லாதவர்கள் என்று சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.

ஆசிரியர்தகுதி தேர்வு:

தமிழகத்தில் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் அனைவரும் ஆசிரியர் தகுதி தேர்வின் மூலம் நியமிக்கப்படுகிறார்கள். ஆசிரியர் பணி என்பது முழுமையான அர்பணிப்புடன், மாணவர்களுக்கு கற்பித்தலை தொடர வேண்டிய அறப்பணி. இதனால் தமிழக அரசு ஆசிரியர்களுக்கு அடிக்கடி முக்கிய அறிவுறுத்தல்களை வெளியிட்ட வண்ணம் இருக்கும். ஆசிரியர் பணிக்கு ஓய்வு கால வயது வரும் வரை பணி நியமனம் செய்யப்படும் வாய்ப்பை தமிழக அரசு வழங்கியுள்ளது.

தமிழகத்தில் புதிய XE வகை வைரஸ் தொற்று பரவல்? மீண்டும் ஊரடங்கு அமல்!

இந்நிலையில், கடந்த 2011ம் ஆண்டுக்கு முன்னதாக ஆசிரியர் பணியில் நியமனம் செய்யப்பட்டவர்கள் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்று தமிழக கல்வித்துறை உத்தரவிட்டது. அவ்வாறு தேர்ச்சி பெறாதவர்களுக்கு ஊதிய உயர்வை தமிழக அரசு நிறுத்தி வைத்துள்ளது. இதனால் 2011க்கு முன்னதாக நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்கள் தங்களுக்கும் ஊதிய உயர்வு வழங்க கோரி சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

அரசு ஊழியர்களுக்கு ஜனவரி முதல் 3 சதவீதம் DA உயர்வு – அரசு விளக்கம்! வெளியான குட் நியூஸ்!

இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் குறித்து தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என அறிவித்து 12 ஆண்டுகள் கடந்தும் தகுதி பெறாத ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு பெற உரிமையில்லை எனவும், ஆண்டு தோறும் ஆசிரியர் தகுதித் தேர்வை நடத்துவது தொடர்பான அரசின் விதிகளை கண்டிப்புடன் அமல்படுத்த வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது. கல்வி உரிமைச் சட்ட விதிகளை அமல்படுத்தாமல் பணியில் ஆசிரியர்களை நீட்டித்திருப்பது கண்டனத்திற்கு உரியது என்றும் ஆசிரியர் தகுதித் தேர்வில் தகுதி பெறாதவர்கள் பணியில் நீடிக்க தகுதியில்லை என்றும் கூறியுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here