அக்டோபர் மாதம் வரை பள்ளிகளை திறப்பது சாத்தியம் இல்லை என தனியார் பள்ளி நிர்வாகிகள் கூட்டத்தில் முடிவு

0

நாடு முழுவதும் தற்போது  கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து வருவதால்  பள்ளிகளை அக்டோபர் மாதம் வரை திறக்க வாய்ப்பில்லை என தனியார் பள்ளி நிர்வாகிகள் கூட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளி முதல்வர்களின் ஆலோசனை கூட்டம்:

ராம்கோ நிறுவனத்தின் உறுப்பு நிறுவனமான பேரண்ட சர்க்கில் நிறுவனம் பள்ளி தலைமை ஆசிரியர்களை ஒருங்கிணைத்து ஆலோசனை கூட்டத்தை நடத்தியது. இந்த கூட்டம் முழுவதும் ஆன்லைன் வழியாக நடத்தப்பட்டது.இந்த கூட்டத்தில் தமிழகம் மட்டுமின்றி பிற மாநிலங்களான மும்பை,தில்லியில் உள்ள பள்ளி முதல்வர்களும் பங்கேற்றனர்.

இந்தியாவில் கொரோனா தொற்று அதிகரிக்கும் நிலையில் குழந்தைகளிடம் சமூக இடைவெளியை கடைபிடிப்பது கடினமானது அதோடு இன்றி கூடுதல் வகுப்பறை கட்டடங்களை அமைக்க வேண்டும் இது போன்ற காரணங்களால் பள்ளிகளை அக்டோபர் மாதம் வரை திறக்க சாத்தியம் இல்லை என தெரிவிக்கப்பட்டது.

சுழற்சி முறையில் வகுப்புகள்:

பின்னர் சுழற்சி முறையில் மாணவர்களை வகுப்புகளுக்கு வரவழைப்பது மற்றும் பெற்றோர் உதவியுடன் பாடங்களை கற்க வைப்பது போன்ற முடிவுகள் எடுக்கப்பட்டது.இறுதியாக  மாணவர்களின் 80 சதவீத கட்டணம் ஆசிரியர்களின் ஊதியத்திற்கு செல்வதால் தற்போது கல்விக்கட்டணத்தை குறைப்பது சாத்தியமில்லை என முடிவு செய்யப்பட்டுள்ளது.

For Online Test Series Click Here
To Join Whatsapp Click Here
To Subscribe Youtube Click Here
To Join Telegram Channel Click Here
To Join Facebook Click Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!