தமிழக பள்ளி மாணவர்களுக்கு 60,000 ரூபாய் வரை கல்வி உதவித்தொகை – விண்ணப்பங்கள் வரவேற்பு!

0
தமிழக பள்ளி மாணவர்களுக்கு 60,000 ரூபாய் வரை கல்வி உதவித்தொகை - விண்ணப்பங்கள் வரவேற்பு!
தமிழக பள்ளி மாணவர்களுக்கு 60,000 ரூபாய் வரை கல்வி உதவித்தொகை - விண்ணப்பங்கள் வரவேற்பு!
தமிழக பள்ளி மாணவர்களுக்கு 60,000 ரூபாய் வரை கல்வி உதவித்தொகை – விண்ணப்பங்கள் வரவேற்பு!

தமிழகம் ,மற்றும் புதுவை மாணவர்களுக்கு வித்யாதன் திட்டத்தின் கீழ் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. தற்போது 2022 – 2023 ம் கல்வியாண்டுக்கான கல்வி உதவித்தொகை பெற விரும்பும் மாணவர்களிடம் விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு வருகிறது. இது குறித்து அறக்கட்டளை புரவலர் குமாரி ஷிபுலால் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

கல்வி உதவித்தொகை:

தமிழகத்தில் கொரோனா தாக்கத்திற்கு பிறகு நடப்பாண்டு பள்ளிகள் திறக்கப்பட்டு வழக்கம் போல வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் கல்வித்தொகை பெறுவதற்கான அறிவிப்புகள் வெளியாகி வருகிறது. தமிழகத்தில் அரசு சார்பாகவும், பல்வேறு கல்வி அறக்கட்டளை சார்பாகவும் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்கள் மற்றும் பட்டியலினத்தவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், தற்போது வித்யாதன் திட்டத்தின் கீழ் கல்வி உதவித்தொகை பெறுவதற்கு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் ஆண்டுதோறும் தமிழகம் மற்றும் புதுவையில் பொருளாதாரத்தில் பின்தங்கிய 11ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.

TN Job “FB  Group” Join Now

இந்த உதவித்தொகை பெற விரும்பும் மாணவர்கள் 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 80% மதிப்பெண்ணுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஆனால் மாற்றுத்திறனாளிகள் 60% மதிப்பெண்ணுடன் தேர்ச்சி பெற்றிருந்தாலே போதுமானது. மேலும் மாணவர்களின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும் என்பது போன்ற நிபந்தனைகளும் விதிக்கப்பட்டு உள்ளது. இத்தகைய தகுதி பெற்ற 11ம் வகுப்பு மாணவர்கள் வித்யாதன் திட்டத்தின் கீழ் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம். இதில் தேர்வு செய்யப்படும் மாணவர்களுக்கு 11, 12ம் வகுப்புகளில் ஆண்டுக்கு தலா ரூ.10,000 உதவித் தொகை வழங்கப்படும்.

ராதிகாவை சந்திக்கும் பாக்கியா? வெளிவரும் உண்மைகள், சீரியலில் அடுத்த அதிரடி திருப்பம்!

தற்போது 2022 – 2023 ம் ஆண்டுக்கான கல்வி உதவித்தொகை பெறுவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு வருகிறது. இது குறித்து வித்யாதன் அறக்கட்டளை சார்பாக அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில் நடப்பு கல்வியாண்டுக்கான கல்வித்தொகை பெற 11ம் வகுப்பு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். அதில் தேர்தெடுக்கப்படும் மாணவர்களுக்கு 11, 12ம் வகுப்புகளில் ஆண்டுக்கு தலா ரூ.10,000 உதவித் தொகை வழங்கப்படும். அத்துடன் பட்டபடிப்பை தொடர ஆண்டுக்கு ரூ.10,000 முதல் ரூ.60,000 வரை கல்வி உதவித்தொகை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விண்ணப்பிப்பது குறித்த கூடுதல் விவரங்களுக்கு [email protected] என்ற மின்னஞ்சல் வாயிலாகவும் 73396 59929, 87924 59646 என்ற தொலைபேசி எண்கள் வாயிலாகவும் தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here