தமிழ்நாடு பள்ளி மேலாண்மைக் குழு திட்டம் – SMC செயலி குறித்த முக்கிய அறிவிப்பு!

0
தமிழ்நாடு பள்ளி மேலாண்மைக் குழு திட்டம் - SMC செயலி குறித்த முக்கிய அறிவிப்பு!
தமிழ்நாடு பள்ளி மேலாண்மைக் குழு திட்டம் - SMC செயலி குறித்த முக்கிய அறிவிப்பு!
தமிழ்நாடு பள்ளி மேலாண்மைக் குழு திட்டம் – SMC செயலி குறித்த முக்கிய அறிவிப்பு!

தமிழக அரசு பள்ளிகளில் மாணவர்களின் நிலை குறித்தான தகவலை பள்ளி மேலாண்மை குழு செயலியில் பதிவு செய்ய வேண்டும். தற்போது எப்படி மேம்பாட்டுத்திட்ட மதிப்பாய்வு செய்வது என்பது குறித்தான முழு விளக்கமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

பள்ளி மேலாண்மை குழு

தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் பலவிதமான உள்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்துவதாலும், அரசு பள்ளி மாணவர்களுக்கு பல்வேறு நல திட்ட உதவிகளை செய்து கொடுப்பதாலும் அரசு பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கை அதிகரித்து வருகிறது. மேலும், ஒவ்வொரு மாணவனுக்கும் பள்ளியில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், மாணவர் பள்ளிக்கு வருகை தந்த நாட்கள், மாணவனுக்கு கற்பித்த பாடத்திட்டம் ஆகிய அனைத்தையும் பள்ளி மேலாண்மை குழு செயலியில் ஆசிரியர் பதிவு செய்ய வேண்டும்.

இந்திய இரயில்வே துறையில் வேலை – எந்த டிகிரி படிச்சிருந்தாலும் விண்ணப்பிக்கலாம்!

தற்போது எப்படி பள்ளி மேம்பாட்டுத்திட்ட மதிப்பாய்வினை செய்வது என்பதை பார்க்கலாம். முதலில், பள்ளி மேலாண்மைக் குழு செயலியில் ID மற்றும் கடவுச்சொல்லை பதிவு செய்து உள்நுழையவும். பின்னர், அதன் முகப்பு பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள பள்ளி மேலாண்மை குழு என்கிற பகுதியை கிளிக் செய்தால் அதில் பலதரப்பட்ட தொகுதிகள் கொடுக்கப்பட்டிருக்கும். அதில் உள்ள மாதாந்திர பள்ளி மேம்பாட்டு திட்டம் என்பதை கிளிக் செய்து அதில் முதலாவதாக கொடுக்கப்பட்டுள்ள திட்டமிடல் மற்றும் மதிப்பாய்வு என்கிற பகுதியை கிளிக் செய்யவும்.

Exams Daily Mobile App Download

அந்த பகுதிக்குள் நுழைந்ததும் நீங்கள் பள்ளியில் தீட்டிய விவரங்கள் அனைத்தும் கொடுக்கப்பட்டிருக்கும். மேலும், அதன் அருகில் உள்ள ஆரோவினை கிளிக் செய்தால் அந்த திட்டத்திற்கான கால கெடு தேதி, நிலை மற்றும் தொகை கொடுக்கப்பட்டிருக்கும். நீங்கள் ஏதேனும் திட்டத்தில் திருத்தம் செய்ய விரும்பினால் அதில் உள்ள நிதி மற்றும் கடைசி நாள் என்கிற பகுதியை கிளிக் செய்து உங்களது திட்டத்திற்கான கால கெடு தேதி மற்றும் தொகையினை திருத்தம் செய்துகொள்ளலாம். மேலும், இந்த திட்டத்தை கைவிடும் எண்ணம் இருந்தால் திட்டம் கைவிடல் என்பதை கிளிக் செய்து அதற்கான தகவலையும் சேமித்துவைக்க வேண்டும்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!