தமிழக பள்ளிக் கல்வித்துறை அலுவலக ஊழியர்களின் மாற்றுப்பணி ஆணை ரத்து!

0
தமிழக பள்ளிக் கல்வித்துறை அலுவலக ஊழியர்களின் மாற்றுப்பணி ஆணை ரத்து!
தமிழக பள்ளிக் கல்வித்துறை அலுவலக ஊழியர்களின் மாற்றுப்பணி ஆணை ரத்து!
தமிழக பள்ளிக் கல்வித்துறை அலுவலக ஊழியர்களின் மாற்றுப்பணி ஆணை ரத்து!

தமிழக்தில் பள்ளிக்கல்வித் துறையின் கீழ் பணிபுரியும் அலுவலர்களின் மாற்றுப் பணி ஆணையை ரத்து செய்து ஏற்கனவே நியமிக்கப்பட்ட பணியில் சேர பள்ளிக்கல்வி இணை இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.

மாற்றுப்பணி ரத்து:

தமிழகத்தில் முதல்வர் முக ஸ்டாலின் தலைமையிலான புதிய அரசு, தமிழக அரசின் அனைத்து துறைகளிலும் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா தடுப்பு பணிகளுக்கு இடையில் மற்ற துறைகளின் பணிகளையும் கண்காணித்து வருகிறது. அரசுத்துறை அதிகாரிகளையும், அலுவலர்களையும் பணியிட மாற்றம் செய்தும் பல்வேறு புதிய நிர்வாக பொறுப்புகளையும் ஒப்படைத்து வருகிறது. இதன் மூலம் அரசு அலுவலர்கள் இடமாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர்.

தமிழக பள்ளி மாணவர்களுக்கு இலவச மூக்கு கண்ணாடி – பள்ளி கல்வித்துறை உத்தரவு!

மற்ற துறைகளை தொடர்ந்து பள்ளிக் கல்வித்துறையில் கீழ் செயல்படும் அலுவலகங்களில் பணியாற்றி வரும் மாவட்ட கல்வி அலுவலரின் கண்காணிப்பாளர், நேர்முக உதவியாளர், போன்றோர் பணியிட மாற்றம் செய்யப்பட்டு வெவ்வேறு இடங்களுக்கும் வேறு துறைகளுக்கும் பணி நியமனம் செய்யப்பட்டனர். இதனால் கல்வித்துறையில் பணிகள் இடைநிற்றலில் உள்ளதாக அதிகாரிகள் கூறுகின்றனர். நிர்வாக பணிகளை தொடர்ந்து மேற்கொள்ள ஏற்கனவே இருந்த அலுவலர்கள் வேண்டும் எனவும் பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

TN Job “FB  Group” Join Now

அதனால் தற்போது இந்த பணியாளர்களை மாற்று பணியிலிருந்து விடுவித்து ஏற்கனவே நியமனம் செய்யப்பட்ட பணியிடத்தில் சேரும் படி பள்ளிகல்வி இணை இயக்குனர் உத்தரவிட்டுள்ளார். இதன் படி பள்ளிக் கல்வித்துறையின் கீழ் இயங்கும் அலுவலகங்களில் பணியாற்றிய அலுவலர்களை துறை சார்ந்த அதிகாரிகள் மாற்று பணியிலிருந்து விடுவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது என பள்ளிகல்வி இணை இயக்குனர் சுற்றறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!