தமிழகத்தில் 2748 கிராம உதவியாளர் காலிப்பணியிடங்கள் – தேர்வு தேதி அறிவிப்பு!

0
தமிழகத்தில் 2748 கிராம உதவியாளர் காலிப்பணியிடங்கள் - தேர்வு தேதி அறிவிப்பு!
தமிழகத்தில் 2748 கிராம உதவியாளர் காலிப்பணியிடங்கள் - தேர்வு தேதி அறிவிப்பு!
தமிழகத்தில் 2748 கிராம உதவியாளர் காலிப்பணியிடங்கள் – தேர்வு தேதி அறிவிப்பு!

தமிழக வருவாய் துறையில் காலியாக உள்ள கிராம உதவியாளர் பணிக்கான விண்ணப்பபதிவுகள் முடிவடைந்த நிலையில் தற்போது தேர்வுக்கான தேதி வெளியிடப்பட்டுள்ளது. இப்பதிவில் தேர்வு தேதி, ஆட்கள் தேர்வு முறை குறித்த விவரங்களை காண்போம்.

தேர்வு தேதி:

தமிழக அரசு வருவாய்த் துறை கடந்த அக்டோபர் மாதம் தனது துறையின் கீழ் காலியாக உள்ள 2748 கிராம உதவியாளர் பணியிடங்கள் குறித்த அறிவிப்பை வெளியிட்டது. இப்பணிக்கு 5ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். குறிப்பாக விண்ணப்பதாரர்களுக்கு எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

மேலும் இப்பணிக்கு பொதுப்பிரிவில் 21 முதல் 32 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். இதர பிரிவினர்கள் 37 வயது வரை விண்ணப்பிக்க சலுகை வழங்கப்பட்டது. இத்தகைய தகுதி உடையவர்கள் ஆன்லைன் வாயிலாக பணிக்கு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டது. அதன்படி கடந்த அக்.10ம் தேதி முதல் நவ.7ம் தேதி வரை விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டது.

தமிழக மக்களுக்கு இந்த தேதியில் பொங்கல் பரிசு.. 10 வருடங்களுக்கு பிறகு புது டிசைனில் வேஷ்டி & சேலை!

Exams Daily Mobile App Download

இந்த நிலையில் இன்று வருவாய் துறையின் கிராம உதவியாளர் பணிக்கான தேர்வு தேதி வெளியாகியுள்ளது. அதில் வரும் டிசம்பர் மாதம் 4ம் தேதி எழுத்து தேர்வு நடைப்பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியிடப்படும் என்று தேர்வாணையம் தெரிவித்துள்ளது.இந்த தேர்வில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு அடுத்த கட்டமாக நேர்காணல் நடத்தப்பட்டு தகுதியானவர் தேர்வு செய்யப்படுவார்கள்.

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!