தமிழக ரேஷன் கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசு 2022 – அரசு பதிலளிக்க வலியுறுத்தல்!

0
தமிழக ரேஷன் கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசு 2022 - அரசு பதிலளிக்க வலியுறுத்தல்!
தமிழக ரேஷன் கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசு 2022 - அரசு பதிலளிக்க வலியுறுத்தல்!
தமிழக ரேஷன் கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசு 2022 – அரசு பதிலளிக்க வலியுறுத்தல்!

தமிழக அரசு வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் வைக்க தேவைப்படும் அத்தியாவசிய பொருட்களை வழங்குவதாக அறிவித்த நிலையில், இவற்றை கொள்முதல் செய்யும் முறைகளில் கொள்முதல் நடக்க வாய்ப்பிருப்பதாக அரசின் மீது புகார்கள் எழுந்துள்ளது.

பொங்கல் பரிசுத்தொகுப்பு:

தமிழகத்தில் வரும் 2022 ஜனவரி மாதத்தில் பொங்கல் பண்டிகை வர இருப்பதை முன்னிட்டு ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் சேமிக்க தேவையான பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய், பாசிப்பருப்பு, நெய் போன்ற பொருட்கள் வழங்க இருப்பதாக அரசு அறிவித்துள்ளது. வழக்கமாக கடந்த சில வருடங்களாக இந்த பொருட்களுடன் பொங்கல் பரிசு தொகை வழங்கப்பட்டு வந்தது. ஆனால் வரும் பொங்கல் பண்டிகையை ஒட்டி ரொக்கப்பணத்திற்கு பதிலாக பண்டிகை கால சமையலுக்கு தேவையான மஞ்சள்தூள், மிளகாய் தூள், மல்லித்தூள், கடுகு, சீரகம், மிளகு, புளி, கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு, ரவை, கோதுமை மாவு, உப்பு போன்ற 20 பொருட்களை கொண்ட துணிப்பையை வழங்க உள்ளதாக தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் நாளை (டிச.10) தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

இதனால் மக்கள் மத்தியில் கடும் அதிருப்தி ஏற்பட்டது. வழக்கம் போல் ரொக்கப்பணம் வழங்க வேண்டும் என்று பலரும் கோரிக்கை வைத்து வந்தனர். இந்நிலையில், முன்னதாக பொங்கல் பரிசு பொருட்கள் கொள்முதல் செய்யப்படுவது குறித்து செய்திகள் வந்தது. அப்போது, கடந்த ஆட்சி காலத்தில் மக்களுக்கு வழங்கப்பட்ட பொருட்கள் கொள்முதல் செய்வதில் அதிக முறைகேடுகள் நடைபெற்றுள்ளது என்றும், அதே இடத்தில தான் மக்களுக்கு கொரோனா நிவாரண பொருள்களும் கொள்முதல் செய்யப்பட்டது. இதனால் பொருட்களின் தரம் குறைவாக இருந்ததாக குற்றசாட்டுகள் எழுந்தது.

தமிழகத்தில் அரசு ஊழியர்கள் ஓய்வு வயது மீண்டும் 58 ஆக மாற்றம் – முதல்வரின் ஒப்புதல்?

தற்போது அதே நிறுவனத்தில் தான் பொருட்கள் கொள்முதல் செய்யப்படுவதாக தகவல்கள் வெளியானதை அடுத்து, அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அவர்கள், கடந்த ஆட்சியில் கொள்முதல் நடந்த அதே இடத்தில் தற்போதும் பொருட்கள் கொள்முதல் செய்யப்படுகிறது. இந்த டெண்டரில் அதிக அளவு பணம் கமிஷனாக கொடுக்கப்பட்டிருக்கிறது. இதனால் மக்களுக்கு வழங்கும் பொருட்களின் தரம் குறைவாகி விடுகிறது. எனவே, பொங்கல் பரிசு தொகுப்புக்கான பொருள்களைக் கொள்முதல் செய்வதில் முறைகேடு நடைபெறுவதாக வெளியாகும் செய்திகள் குறித்து தமிழக அரசு உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என்று அறிக்கை வெளியிட்டுள்ளார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here