அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ஹாப்பி நியூஸ் – மத்திய அரசின் மொபைல் ஆப் அறிமுகம்!

0
அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ஹாப்பி நியூஸ் - மத்திய அரசின் மொபைல் ஆப் அறிமுகம்!
அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ஹாப்பி நியூஸ் - மத்திய அரசின் மொபைல் ஆப் அறிமுகம்!
அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ஹாப்பி நியூஸ் – மத்திய அரசின் மொபைல் ஆப் அறிமுகம்!

இப்போது ரேஷன் கார்டு தொடர்பான அனைத்து வசதிகளையும், மாற்றங்களையும் செய்வதற்கு ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டத்தின் கீழ் மேரா ரேஷன் என்ற செயலியை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது. இந்த சேவைகள் குறித்த முக்கிய விஷயங்களை விரிவாக காணலாம்.

ரேஷன் கார்டு

தமிழக அரசால் வழங்கப்பட்டுள்ள ரேஷன் அட்டைகள் ஒரு முக்கிய அடையாள ஆவணமாக கருதப்படுவதால் இதில் உள்ள தகவல்கள் அனைத்தும் சரியாகவும், புதுப்பிப்பு செய்யப்பட்டதாகவும் இருக்க வேண்டியது அவசியமாகும். அதனால் ரேஷன் அட்டைகளில் ஏதேனும் சில மாற்றங்களை செய்வதற்கு நீங்கள் அலுவலம் சென்று அலையத்தேவையில்லை. இப்போது நீங்கள் இருக்கும் இடத்தில் இருந்தபடியே இந்த சேவைகளை செய்வதற்கு மொபைல் செயலிகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

Post Office இல் சிறந்த சேமிப்பு திட்டம் – ரூ.417 முதலீட்டில் ரூ.40 லட்சம் வருமானம்! முழு விபரம் இதோ!

சமீபத்தில், ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டத்தின் கீழ், மத்திய அரசு மேரா ரேஷன் என்ற மொபைல் செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் ரேஷன் கார்டு தொடர்பான அனைத்து பிரச்னைகளுக்கும் தீர்வு காண முடியும். மத்திய அரசின் இந்த மொபைல் ஆப் பயன்பாடு 10 மொழிகளில் கிடைக்கிறது. இந்த ஆப் புதிய ரேஷன் கார்டுக்கு பதிவு செய்வது, ரேஷன் கார்டு ஆதார் அட்டையுடன் இணைக்கப்பட்டுள்ளதா என்பதை தெரிந்து கொள்வது உள்ளிட்ட பல வசதிகளை வழங்குகிறது.

அதே நேரத்தில் வேலை அல்லது வேறு ஏதேனும் காரணங்களால் பிற மாநிலங்களுக்கு இடம் பெயரும் மக்களும் இந்த செயலியை பயன்படுத்தி சேவைகளை பெற்றுக்கொள்ள முடியும். இது மட்டுமின்றி, ரேஷன் அட்டைதாரர்களுக்கு என்னென்ன சலுகைகள் வழங்கப்படுகிறது என்பதை இந்த ஆப் மூலம் தெரிந்து கொள்ளலாம். இந்த ஆப்பில் இடம்பெயர்வு வசதியும் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் புலம்பெயர்ந்தோர் தங்கள் இடம்பெயர்வு விவரங்களை சரிபார்க்க முடியும்.

அண்ணா பல்கலை மாணவர்களுக்கு நவம்பர் – டிசம்பர் தேர்வு கால அட்டவணை 2021 | வெளியீடு!

மேலும் ரேஷன் கார்டு வைத்திருப்பவர்கள் உணவு தானியங்களின் தகுதி, அருகில் இருக்கும் நியாய விலைக் கடைகளையும் கண்டறியலாம். இப்போது ரேஷன் கார்டு தொடர்பான அனைத்து சேவைகளும் நாட்டின் 3.7 லட்சத்திற்கும் அதிகமான பொது சேவை மையங்களில் கிடைக்கின்றன. மேலும் ஆண்ட்ராய்டு பயனர்கள் மேரா ரேஷன் செயலியை ப்ளே ஸ்டோரிலிருந்து பதிவிறக்கம் செய்து ஆதார் அல்லது ரேஷன் கார்டு எண்ணை உள்ளிட்டு சேவைகளை பெற்றுக்கொள்ளலாம்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!