தமிழக ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு – கார்டுகள் வகைப்படுத்துதல்!

0
தமிழக ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு - கார்டுகள் வகைப்படுத்துதல்!
தமிழக ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு - கார்டுகள் வகைப்படுத்துதல்!
தமிழக ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு – கார்டுகள் வகைப்படுத்துதல்!

இந்தியாவில் வசிக்கும் ஒவ்வொரு குடும்பத்துக்கும் அடையாள ஆவணமாக ரேஷன் அட்டைகள் செயல்பட்டு வருகிறது. இவ்வகை ரேஷன் கார்டுகள் 5 வகையான விதங்களில் வகைப்படுத்தப்பட்டு பயனர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

ரேஷன் கார்டுகள்

ஒவ்வொரு இந்திய பிரஜைக்கும் மத்திய அரசால் கொடுக்கப்பட்டுள்ள ஒரு முக்கிய ஆவணம் என்றால் அது ரேஷன் அட்டைகள் தான். ஏனென்றால் இந்த ரேஷன் கார்டுகளில் ஒவ்வொருவரது பெயர், முகவரி, புகைப்படம், பிறந்த தேதி உள்ளிட்ட அனைத்து தகவல்களும் இடம்பெற்றிருக்கும். அதாவது ரேஷன் அட்டைகள் ஒரு தனி மனிதன் மற்றும் குடும்பத்தினரின் முக்கிய ஆவணமாக கருதப்படுவதை விட, ரேஷன் கடைகளில் கிடைக்கும் இலவச மற்றும் மலிவு விலை பொருட்களை பெற்றுக்கொள்ள இவை அவசியமானதாகும்.

தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை கொட்டித் தீர்க்கும் – வானிலை அறிக்கை!

முன்பெல்லாம் இவ்வகை ரேஷன் கார்டுகள் அட்டைகளில் பயன்படுத்தப்பட்டு வந்தது. ஆனால் இவை தற்போது டிஜிட்டல் வடிவத்துக்கு மாறி, ஒரு ATM அட்டைகள் போன்று நாம் பயன்படுத்தக்கூடிய வசதிகளுடன் உபயோகத்தில் உள்ளது. இந்த அட்டைகளை பொருத்தளவு ஒவ்வொரு குடும்பத் தலைவரின் வருமானத்தை வைத்து வெவ்வேறு வகையாக பிரிக்கப்பட்டு அவை பொது மக்களின் பயன்பாட்டில் இருந்து வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் அரசின் நலத்திட்ட உதவிகள், கொரோனா நிவாரண நிதி, இலவச மளிகை பொருட்கள் உள்ளிட்டவை அனைத்தும் ரேஷன் கார்டுகளை சார்ந்தே வழங்கப்பட்டுள்ளன.

பொதுவாக ஒவ்வொரு ரேஷன் கார்டுகளுக்கும் தனி சிறப்பு அல்லது சலுகை உண்டு. சில ரேஷன் கார்டுகளுக்கு அரிசி மற்றும் மற்ற பொருட்களும் சில ரேஷன் கார்டுகளுக்கு அந்த பொருட்களில் குறிப்பிட்ட அளவும் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. அதன் படி அரசால் வகைப்படுத்தப்பட்டுள்ள 5 பிரிவுகளிலான ரேஷன் கார்டுகள் எவற்றுக்கு பயன்படுகிறது என்ற விளக்கம் தற்போது கொடுக்கப்பட்டுள்ளது. அதன் கீழ்

முதலாவதாக, PHH ரேஷன் அட்டைகள்: இந்த ரேஷன் கார்டுகளில் இடம்பெற்றுள்ள குடும்பத்தலைவரின் புகைப்படத்துக்கு கீழே PHH குறியீடுகள் கொடுக்கப்பட்டிருக்கும். அப்படி இருந்தால் இவ்வகை அட்டைதாரர்களுக்கு அரிசி உட்பட மற்ற அனைத்து பொருட்களும் விநியோகம் செய்யப்படும்.

அடுத்ததாக PHH – AAY ரேஷன் அட்டை: அதாவது PHH – AAY என்ற குறியீடு இருக்கும் அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் 35 கிலோ அரிசி உட்பட மற்ற அனைத்துப் பொருட்களும் கிடைக்கும்.

TN Job “FB  Group” Join Now

மூன்றாவதாக NPHH ரேஷன் அட்டை: NPHH என்று குறிப்பிடப்பட்டிருக்கும் கார்டுகளை வைத்திருப்பவர்களுக்கு அரிசி உட்பட மற்ற அனைத்து பொருட்களும் கொடுக்கப்படும்.

தொடர்ந்து NPHH-S ரேஷன் அட்டை: சர்க்கரை அட்டைகள் என்று அழைக்கப்படக்கூடிய இவ்வகையான NPHH-S ரேஷன் அட்டைகளுக்கு அரிசி தவிர சர்க்கரை, எண்ணெய் உள்ளிட்ட பொருட்கள் கிடைக்கும்.

கடைசியாக NPHH-NC அட்டைகள்: இவற்றை வைத்திருப்பவர்களுக்கு நியாயவிலைக் கடைகளில் கிடைக்கும் எவ்வகையான சலுகைகளும் கொடுக்கப்படாது. இந்த ரேஷன் அட்டைகளை பயனர்கள் அடையாள ஆவணமாகவும், முகவரிக்காகவும் உபயோகித்துக் கொள்ள முடியும்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!