நாட்டிலேயே மருத்துவ காப்பீட்டு சிகிச்சையில் தமிழகம் முதல் இடம் – மத்திய அரசு அறிக்கை!

0
நாட்டிலேயே மருத்துவ காப்பீட்டு சிகிச்சையில் தமிழகம் முதல் இடம் - மத்திய அரசு அறிக்கை!
நாட்டிலேயே மருத்துவ காப்பீட்டு சிகிச்சையில் தமிழகம் முதல் இடம் - மத்திய அரசு அறிக்கை!
நாட்டிலேயே மருத்துவ காப்பீட்டு சிகிச்சையில் தமிழகம் முதல் இடம் – மத்திய அரசு அறிக்கை!

தமிழகத்தில் முதல்வரின் மருத்துவ காப்பீடு திட்டம் மூலம் சிறப்பாக பல வகையான நோய்களுக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், மத்திய அரசு மாநில வாரியாக இது தொடர்பான ஆய்வு அறிக்கையை வெளியிட்டுள்ளது.

மருத்துவ காப்பீடு திட்டம்:

குறைவான வருமானத்தை கொண்ட குடும்பங்களில் திடீரென யாருக்கேனும் நோய் ஏற்பட்டு விட்டால் அந்த குடும்பத்தை சேர்ந்தவர்கள் படும் அவதிக்கு வார்த்தைகளே இல்லை. வசதி படைத்தவர்களுக்கு ஏற்படும் நோய்களுக்கு பணம் ஒரு பிரச்சனையாக இருப்பதில்லை. இதனை கருத்தில் கொண்டு ஏழை, எளிய மக்களும் நல்ல முறையில் சிகிச்சை எடுத்து நலம்பெற வேண்டும் என்ற நோக்கத்தில் தான் அரசு மருத்துவ காப்பீட்டு திட்டத்தினை அறிமுகம் செய்தது.

தமிழகத்தில் முதல்முறையாக கடந்த 2009 ம் ஆண்டு கலைஞர் காப்பீட்டுத் திட்டம் என்ற பெயரில் தொடங்கப்பட்ட இந்த திட்டம், பின்னர், முதலமைச்சரின் விரிவான காப்பீட்டுத் திட்டம் என்று பெயர் மாற்றம் பெற்றது. தமிழகத்தில் இத்திட்டத்தின் கீழ் 23.07.2009 முதல் 31.08.2022 வரை 1,19,10,653 பயனாளிகள் 10,835 கோடி ரூபாய் மதிப்பிற்கு சிகிச்சை பெற்றுள்ளனர். குறிப்பாக, மிகவும் பரவலாக மக்கள் பாதிக்கப்படக் கூடிய 1513 சிகிக்சை முறைகள் இந்த திட்டத்தில் அடங்கும். மேலும், 937 தனியார் மருத்துவமனைகள் மற்றும் 796 அரசு மருத்துவமனைகள் என்று மொத்தமாக 1733 மருத்துவமனைகள் முதலமைச்சரின் விரிவான காப்பீட்டுத் திட்டத்தில் உள்ளன. அதிலும்,கடந்த 2018ம் ஆண்டு முதலாக மத்திய அரசும் இந்த திட்டத்தில் பங்காற்றி வருகிறது.

தமிழக 6 – 9 ம் வகுப்பு மாணவர்களுகான புதிய திட்டம் – பள்ளி கால அட்டவணையில் மாற்றம்?

Exams Daily Mobile App Download

இந்நிலையில், மத்திய அரசு நாட்டில் உள்ள அனைத்து மாநிலங்களின் 2018 – 19ம் ஆண்டிற்கான மத்திய சுகாதார செலவு கணக்கு ஆய்வறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் தமிழகம் முதலிடத்திலும், 1,481 கோடி ரூபாய் மதிப்பிற்கு சிகிச்சை அளித்து மகாராஷ்டிரா 2ம் இடத்திலும், ஆந்திரா 1,459 கோடி ரூபாய் மதிப்பிற்கு சிகிச்சை அளித்து 3ம் இடத்திலும், 23 கோடி ருபாய் மட்டும் செலவு செய்து நாட்டிலேயே உத்தரகாண்ட் கடைசி இடத்திலும் இருப்பதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!