
மத்திய அரசின் ‘ஆதர்ஷ்’ திட்டத்தில் 1,253 ரயில் நிலையங்கள் தேர்வு – தமிழக ரயில் நிலையங்களின் பட்டியல்!
நாடு முழுவதும் உள்ள ரயில் நிலையங்களை மேம்படுத்த மத்திய அரசு ‘ஆதர்ஷ்’ திட்டத்தை செயல்படுத்தி இருக்கிறது. இந்த திட்டத்தின் மூலம் 1,253 ரயில் நிலையங்கள் தேர்வு செய்யப்பட்டு தற்போது பணிகள் முடிவடைந்து இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
ரயில் நிலையங்கள்:
இந்தியாவில் ரயில் சேவைகளை தான் பொதுமக்கள் பலர் அதிகம் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் ரயில் நிலையங்களில் பயணிகளின் வசதிகளை மேம்படுத்த மத்திய அரசு ‘ஆதர்ஷ்’ திட்டத்தை அமல்படுத்தி இருக்கிறது. இந்த திட்டம் மூலம் நாடு முழுவதும் உள்ள 1253 ரயில் நிலையங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. அதில் 1218 ரயில் நிலையங்களில் மேம்பாடு பணி முடிவடைந்து இருக்கின்றன. மீதி 35 ரயில் நிலையங்களில் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த பணி 2023-24 ஆம் ஆண்டிற்குள் முடிவுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த திட்டத்தில் தமிழகத்தில் சென்னை கோட்டத்தில் உள்ள சென்னை கடற்கரை, சென்னை பூங்கா, சென்னை சேத்துப்பட்டு, குரோம்பேட்டை, தாம்பரம், பெரம்பூர், பரங்கிமலை, ராயபுரம், கொருக்குப்பேட்டை, ஆவடி, திருவள்ளூர், திருவாலங்காடு, திருநின்றவூர், காஞ்சிபுரம், அரக்கோணம், செஞ்சி பனம்பாக்கம், மணவூர், மதுரை கோட்டத்தில் அவனீஸ்வரம், காட்பாடி, கூடல்நகர், கொட்டாக்கரை, புதுக்கோட்டை,பாம்பன், ராஜபாளையம், புனலூர்,
TNPSC திருத்தப்பட்ட வருடாந்திர தேர்வு அட்டவணை 2023 – வெளியீடு!
ஸ்ரீவில்லிபுத்தூர், சங்கரன்கோவில், தூத்துக்குடி, தென்காசி, தேனி, கடையநல்லூர், சந்திப்பு, விருதுநகர், திருமங்கலம், குந்தாரா, திருப்பரங்குன்றம், சேலம் கோட்டத்தில் கோவை சந்திப்பு, சேலம், பீளமேடு, திருப்பூர், திருச்சி, இருகூர், ஸ்ரீரங்கம், திருச்சி கோட்டத்தில் திருச்சி, திருவெறும்பூர், கும்பகோணம், அரியலூர், மயிலாடுதுறை, நாகூர், புதுச்சேரி, திருவாரூர், நாகப்பட்டினம், விருத்தாச்சலம், வேலூர் கண்டோன்மென்டு ஆகிய ரயில் நிலையங்கள் அடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.