தமிழக தனியார் பள்ளிகள் ‘இதை’ செய்தால் நடவடிக்கை – அமைச்சர் எச்சரிக்கை அறிவிப்பு!

0
தமிழக தனியார் பள்ளிகள் 'இதை' செய்தால் நடவடிக்கை - அமைச்சர் எச்சரிக்கை அறிவிப்பு!
தமிழக தனியார் பள்ளிகள் 'இதை' செய்தால் நடவடிக்கை - அமைச்சர் எச்சரிக்கை அறிவிப்பு!
தமிழக தனியார் பள்ளிகள் ‘இதை’ செய்தால் நடவடிக்கை – அமைச்சர் எச்சரிக்கை அறிவிப்பு!

தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் நேற்று ஜூன் 13 ல் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் ஆரம்பமாகியுள்ள நிலையில் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் திருச்சியில் நலத்திட்டங்களை வழங்கிய பிறகு சில கட்டுப்பாடுகளையும் அறிவித்துள்ளார். அதன்படி நடவாத பள்ளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளார்.

பள்ளிகளில் உள்ள கட்டுப்பாடு:

உலக அளவில் கடந்த 2 வருட கால கட்டமாக கொரோனா என்ற பெரும் நோய் தொற்றினால் நாட்டில் பல மாற்றங்கள் ஏற்பட்டது. அதில் பாதிக்கப்பட்டதில் ஒன்று மாணவர்களின் கல்வியும் தான். 2020 ல் தொடங்கி 2021 வரையிலும் பள்ளி கல்லூரி என அனைத்தும் மூடப்பட்டது. அந்த சமயம் மாணவர்களுக்கு ஆன்லைன் வாயிலாக வகுப்புகள் நடந்தாலும், 10,11,12 மாணவர்களுக்கு பொதுத் தேர்வுகள் நடத்தப்படவில்லை மற்றும் 8 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு கட்டாய தேர்ச்சி என்றும் அறிவிக்கப்பட்டது. அதன் பிறகு நடப்பு ஆண்டு தமிழகத்தில் கொரோனா பரவலின் தாக்கம் குறைய – குறைய கட்டுப்பாடுகளும் தளர்த்தப்பட்டன. இதனால் கடந்த பிப்ரவரி மாதம் பள்ளிகள் அனைத்தும் திறக்கப்பட்டு தேர்வுகளும் நடந்து முடிந்து கோடை விடுமுறையும் அளிக்கப்பட்டது.

TN Job “FB  Group” Join Now

அதை தொடர்ந்து தற்போது கோடை விடுமுறை முடிவுக்கு வந்து மீண்டும் நடப்பு ஆண்டுக்கான நேரடி வகுப்புகள் நேற்று ஜூன் 13ல் ஆரம்பமாகியுள்ளது. பள்ளிகள் திறப்பதற்கு முன்பு தமிழக அரசு பல முன்னேற்பாடுகளை பள்ளிகள் திறப்பிற்கு பிறகும் சில கட்டுப்பாடுகளை குறித்து திருச்சியில் நடைபெற்ற ஒரு செய்தியாளர்கள் சந்திப்பில் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது, அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை கடந்த ஆண்டை விட அதிகரித்து வருவதாகவும், அப் பள்ளிகளின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் வகையில் வரும் கல்வி ஆண்டில் 9,494 ஆசிரியர்கள் புதிதாக நியமிக்கப்பட உள்ளோம் எனவும் தெரிவித்தார். அப்போது பள்ளியில் பயிலும் மாணவர்கள் வகுப்பறைக்குள் செல்போன்கள் கொண்டு வந்தால் உரிய ஆசிரியர்களால் பறிமுதல் செய்யப்பட்டு திருப்பி தரப்பட மாட்டாது என சொல்லி எச்சரித்துள்ளார்.

‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் முட்டி மோதிக்கொள்ளும் ஐஸ்வர்யா & மீனா – வைரலாகும் வீடியோ!

மேலும், தனியார் பள்ளி மாணவர்கள் மாற்றுச் சான்றிதழ் கேட்டால் உடனடியாக வழங்க வேண்டும், இல்லையெனில் டிசி தர மறுக்கும் பள்ளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். கடந்த 2 ஆண்டுகளாக வீட்டுக்குள் அடங்கி கிடந்த மாணவர்கள் மனதளவில் இறுக்கத்துடன் உள்ளதால் பள்ளிகள் திறக்கப்பட்டு முதல் 5 நாட்களுக்கு வகுப்புகள் நடக்காது. மேலும், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், காவல்துறை அதிகாரிகள் மூலம் தினமும் 2 மணி நேரம் உளவியல் பயிற்சிகளும் மாணவர்களுக்கு வழங்கப்படும். அதனை தொடர்ந்து கொரோனா பாதிப்பில் மீண்டும் குழந்தைகள் பாதிக்காத விதம் தடுப்பூசி முகாம் ஒவ்வொரு பள்ளிகளிலும் நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது எனவும் தெரிவித்திருந்தார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!