தமிழகத்தில் என்எல்சி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க பிப்.11 தேதி கடைசி நாள்!

0
தமிழகத்தில் என்எல்சி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்க பிப்.11 தேதி கடைசி நாள்!
தமிழகத்தில் என்எல்சி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க பிப்.11 தேதி கடைசி நாள்!

தமிழகத்தில் இந்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளிட்டுள்ளது. இதற்கான காலியிடங்கள், சம்பளம் உள்ளிட்ட பல்வேறு தகவல்களை விரிவாக பார்க்கலாம்.

வேலைவாய்ப்பு

தமிழகத்தில் அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப பல்வேறு அறிவிப்புகளை அரசு வெளியிட்டு வருகிறது. இதனை தொடர்ந்து இந்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான பழுப்பு நிலக்கரி நிறுவனம் கடலூர் மாவட்டம் மற்றும் நெய்வேலியில் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப உள்ளதாக அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதில் குறிப்பாக மாற்றுத்திறனாளிகளுக்கு உரிய வேலைவாய்ப்பை நிரப்ப உள்ளதாக தெரிவித்துள்ளது. இப்பணியில் சேர விருப்பமும், தகுதியும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

மாநிலம் முழுவதும் வார இறுதி, இரவு ஊரடங்கு உத்தரவு நீக்கம்? முதல்வர் அறிவிப்பு!

இப்பணியில் Assistant Service Worker / Trainee என்ற பணியிடத்துக்கு 5ம் வகுப்பு மற்றும் அதற்கு மேற்பட்ட படிப்பில் தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும். இதையடுத்து Assistant Industrial Worker / Trainee(Non ITI) பணியிடத்துக்கு குறைந்தபட்சமாக 8ம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை முடித்தவராக இருக்கலாம். அத்துடன் Data Entry Operator / Trainee என்ற பணிக்கு கணினி பாடப்பிரிவை கொண்ட பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றவராக இருத்தல் வேண்டும். இதர பணிகளுக்கு ஏதேனும் பாடப்பிரிவில் தேர்ச்சி பெற்றவராக இருத்தல் வேண்டும்.

இதற்கு எழுத்து தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலமாக தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். மேலும் இத்தேர்வுகளில் தேர்ச்சி பெற்று பணிகளில் நியமிக்கப்படுவர்களுக்கு ரூ.15,000 முதல் ரூ.85,000 வரை வழங்கப்படுகிறது. இதற்கு விண்ணப்பிக்க https://www.nlcindia.in/ என்ற இணையதள முகவரியில் நாளை முதல் பிப்ரவரி 11ம் தேதி முதல் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் இது தொடர்பான தகவல்களுக்கு https://www.nlcindia.in/ என்ற இணையதளம் மூலமாக தெரிந்து கொள்ளாலாம். அதனால் வேலையில்லா இளைஞர்கள் இப்பணிக்கு விண்ணப்பித்து வேலைவாய்ப்புகளை பெற்று கொள்ளலாம்.

தற்போது என்எல்சி நிறுவனத்தில் உள்ள பணி மற்றும் காலியிடங்கள் குறித்து விரிவாக பார்க்கலாம்

 • பணியின் பெயர் : Assistant Service Worker/Trainee
 • காலியிடங்கள்: 05
 • மாத சம்பளம்: ரூ.15,000 – 30,000

 

 • பணியின் பெயர்: Assistant Industrial Worker/Trainee(Non ITI)
 • காலியிடங்கள்: 08
 • மாத சம்பளம்: ரூ.15,000 – 30,000

 

 • பணியின் பெயர்: Clerical Assistant Gr.II/Trainee
 • காலியிடங்கள்: 07
 • மாத சம்பளம்: ரூ.19,000 – 77,000

 

 • பணியின் பெயர்: Junior Stenographer/Trainee
 • காலியிடங்கள்: 05
 • மாத சம்பளம்: ரூ.20,000 – 81,000

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here