தமிழ்நாடு அமைச்சுப்‌பணி மற்றும் நீதித்‌துறை காலியிடங்கள்- செயலாளர் அறிக்கை!!

0
தமிழ்நாடு அமைச்சுப்‌பணி மற்றும் நீதித்‌துறை காலியிடங்கள்- செயலாளர் அறிக்கை!!
தமிழ்நாடு அமைச்சுப்‌பணி மற்றும் நீதித்‌துறை காலியிடங்கள்- செயலாளர் அறிக்கை!!
தமிழ்நாடு அமைச்சுப்‌பணி மற்றும் நீதித்‌துறை காலியிடங்கள்- செயலாளர் அறிக்கை!!

தமிழ்நாடு அமைச்சுப்‌ பணி மற்றும்‌ நீதித்‌ துறை அமைச்சுப்‌ பணி ஆகியவற்றில்‌ காலியாக இருந்த தமிழ்நாடு அரசுப்‌ பணியாளர்‌ தேர்வாணையத்தின்‌ வரம்பிற்குட்பட்ட தட்டச்சர்கள்‌ மற்றும்‌ சுருக்கெழுத்துத்‌ தட்டச்சர்கள்‌ பணியிடங்களை தற்காலிகமாக நிரப்பிட தனியானதொரு திட்டம்‌ வகுக்கப்பட்டு, தகுதியான நபர்களை தெரிவு செய்ய வேண்டும் என அரசு செயலாளர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

காலி பணியிடங்கள்:

தமிழ்நாடு அமைச்சுப்‌ பணி மற்றும்‌ தமிழ்நாடு நீதித்‌ துறை அமைச்சுப்‌ பணி ஆகியவற்றில் காலிப்பணியிடங்கள் குறித்து அரசு செயலாளர் அனைத்து துறை தலைவர்களுக்கும், அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் மாவட்ட நீதிபதிகள், தலைமை குற்றவியல் நடுவர்கள், செயலாளர்கள், TNPSC , தொழில்நுட்ப கல்வி இயக்ககம் போன்றவற்றிக்கு அறிவிப்பு ஒன்றை அனுப்பியுள்ளார்.

வார இறுதி முழு ஊரடங்கு உத்தரவு நீக்கம் – மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு!

அதில், தமிழ்நாடு அமைச்சுப்‌ பணி மற்றும்‌ தமிழ்நாடு நீதித்‌ துறை அமைச்சுப்‌ பணி ஆகியவற்றில்‌ காலியாக இருந்த தமிழ்நாடு அரசுப்‌ பணியாளர்‌ தேர்வாணையத்தின்‌ வரம்பிற்குட்பட்ட தட்டச்சர்கள்‌ மற்றும்‌ சுருக்கெழுத்துத்‌ தட்டச்சர்கள்‌ நிலை-111) பணியிடங்களை தற்காலிகமாக நிரப்பிட தனியானதொரு திட்டம்‌ வகுக்கப்பட்டு, தகுதியான நபர்களை தெரிவு செய்ய தமிழ்நாடு தொழில்நுட்பக்‌ கல்வி ஆணையர்‌ அவர்களுக்கு அதிகாரம்‌ அளித்து உரிய ஆணைகள்‌ வெளியிடப்பட்டது. அதைத்‌ தொடர்ந்து அவர்களுக்கென பணிநடைமுழை விதிகள்‌ பார்வை இரண்டில்‌ கண்டுள்ள அரசாணையில்‌ தனியே வகுக்கப்பட்டது.

தற்காலிக அடிப்படையில்‌ நியமனம்‌ செய்யப்பட்ட தட்டச்சர்கள்‌ மற்றும்‌ சுருக்கெழுத்துத்‌ தட்டச்சர்கள்‌ (நிலை – 111) அவர்கள்‌ பணிநியமனம்‌ பெற்ற நாள்‌ முதல்‌ ஓராண்டு காலம்‌ வரை மட்டுமே பணியில்‌ நீடிக்க முடியும்‌ என்றும்‌, தமிழ்நாடு அரசுப்‌ பணியாளர்‌ தேர்வாணையத்தால்‌ தெரிவு செய்யப்படும்‌ தகுதி வாய்ந்த நபர்கள்‌ வரும்‌ நேர்வில்‌, அத்தற்காலிக பணியாளர்கள்‌ எவ்வித முன் அறிவிப்புமின்றி பணிநீக்கம்‌ செய்யப்படுவர்‌ என்றும்‌ ஆணையிடப்பட்டுள்ளது. மேலும் தமிழ்நாடு நீதித்துறை அமைச்சுப்‌ பணியில்‌ மேற்கொள்ளப்படும்‌ தற்காலிக பணிநியமனத்திற்கு விலக்கு அளித்து ஆணை வெளியிடப்பட்டது.

மேற்கூறிய தற்காலிக தட்டச்சர்கள்‌ மற்றும்‌ சுருக்கெழுத்துத்‌ தட்டச்சர்கள்‌ (நிலை – 111) ஆகியோரது ஓராண்டு காலப்பணியினை 02.07.2008 பிற்பகல்‌ முடிவுக்கு கொண்டுவந்து, 03.07.2008 அன்று ஒரு நாள்‌ பணியிடைமுறிவு வழங்கி, மீண்டும்‌ 04.07.2008 அன்று அவர்களை தற்காலிகமாக பணியமர்த்தி ஆணை வெளியிடப்பட்டது.

தற்காலிகமாக தமிழ்நாடு அமைச்சுப்‌ பணி, தமிழ்நாடு நீதித்‌ துறை அமைச்சுப்‌ பணி மற்றும்‌ தமிழ்நாடு தலைமைச்‌ செயலகப்பணி ஆகியவற்றில்‌ நியமனம்‌ செய்யப்பட்ட தட்டச்சர்கள்‌ மற்றும்‌ சுருக்கெழுத்துத்‌ தட்டச்சர்களை நிரந்தரமாக ஈர்த்துக்கொள்ளும்பொருட்டு தமிழ்நாடு அரசுப்‌ பணியாளர்‌ தேர்வாணையம்‌ மூலம்‌ தொகுதி-4 அளவில்‌ சிறப்புப்‌ போட்டித்‌ தேர்வினை நடத்திட உரிய ஆணை வெளியிடப்பட்டது. 2009, 2010 மற்றும்‌ 2011 ஆம்‌ ஆண்டுகளில்‌ தற்காலிக தட்டச்சர்கள்‌ மற்றும்‌ சுருக்கெழுத்துத்‌ தட்டச்சர்கள்‌ (நிலை – 111) – ஆக பணிபுரிந்தோருக்கு ஒரு நாள்‌ பணியிடைமுறிவு வழங்கி, மீண்டும்‌ அவர்களை தற்காலிகமாக பணியமர்த்தி ஆணை வெளியிடப்பட்டது.

தமிழ்நாடு அரசுப்‌ பணியாளர்‌ தேர்வாணையக்‌ கடிதத்தில்‌, தேர்வாணையம்‌ மூலம்‌ நடத்தப்பட்ட மேற்கண்ட சிறப்புப்‌ போட்டித்‌ தேர்வு 2009.ஸ்‌ தெரிவு செய்யப்பட்ட அனைவருக்கும்‌ தட்டச்சர்‌ மற்றும்‌ சுருக்கெழுத்து தட்டச்சர்கள்‌ (நிலை – 111) பணியிடம்‌ ஒதுக்கீடு செய்யும்‌ பணி நிறைவுபெற்று சம்பந்தப்பட்ட அலகு / துறைத்‌ தலைவர்களுக்கு தெரிவுப்‌ பட்டியல்‌ அனுப்பி வைக்கப்பட்டதாக தமிழ்நாடு அரசுப்‌ பணியாளர்‌ தேர்வாணையம்‌ தெரிவித்தது. மேலே குறிப்பிட்ட தற்காலிக தட்டச்சர்கள்‌ மற்றும்‌ சுருக்கெழுத்துத்‌ தட்டச்சர்களின்‌ பணியினை 2012-ஆம்‌ ஆண்டு முதல்‌ 2020-ஆம்‌ ஆண்டு வரை, ஒவ்வொரு ஆண்டும்‌, ஒரு நாள்‌ பணியிடைமுறிவு வழங்கி, மீண்டும்‌ அவர்களை தற்காலிகமாக பணியமர்த்தி ஆணைகள்‌ வெளியிடப்பட்டன.

TN Job “FB  Group” Join Now

2009.ல்‌ கலந்துகொண்டு, தேர்ச்சி பெறாதோர்‌, விண்ணப்பித்து தேர்வு எழுதாதோர்‌ மற்றும்‌ தேர்வுக்குப்பின்‌ விண்ணப்பம்‌ நிராகரிக்கப்பட்டோர்‌ மற்றும்‌ வேறு சில காரணங்களுக்காக நாளதுவரை சம்பந்தப்பட்ட துறைகளில்‌ தற்காலிக அடிப்படையில்‌ தொடர்ந்து பணியாற்றி வரக்கூடும்‌ எனக்‌ கருதப்படுகிறது. பார்வை இரண்டில்‌ கண்டுள்ள அரசாணையில்‌ வெளியிடப்பட்ட பணிநடைமுறை விதிகளில்‌, விதி 2௦-ன்படி, மேலே குறிப்பிட்ட தற்காலிக தட்டச்சர்கள்‌ மற்றும்‌ சுருக்கெழுத்து தட்டச்சர்கள்‌ (நிலை-111) ஆகியோரது ஓராண்டு கால தற்காலிகப்‌ பணி 03.07.2020 முற்பகல்‌ தொடங்கி 02.07.2021 பிற்பகல்‌ முடிவுறும்‌ நிலையில்‌, அவர்களின்‌ தற்காலிகப்‌ பணிக்காலத்தினை, 30.06.2021 பிற்பகல்‌ முடிவுக்கு கொண்டுவந்து, 0107.2021 அன்று ஒரு நாள்‌ பணியிடைமுறிவு வழங்கி, 02.07.2021 முற்பகல்‌ முதல்‌ மீண்டும்‌ தற்காலிக அடிப்படையில்‌ பணியமர்த்துமாறும்‌, அதற்குரிய ஆணைகளைத்‌ தனித்தனியே வெளியிடுமாறும்‌, மேற்படி பணியிடைமுறிவு வழங்கப்பட்டு மீண்டும்‌ பணியமர்த்தப்பட்டோர்‌ விவரங்களுடன்‌, பணியிடைமுறிவு வழங்காமல்‌ நாளது வரை தற்காலிகமாகத்‌ தொடர்ந்து பணியிலிருப்போர்‌ விவரங்களையும்‌ அதற்கான காரணங்களுடன்‌ பட்டியலிட்டு அரசுக்கு உடன்‌ அனுப்பிவைக்குமாறும்‌ அத்தகையோர்‌ எவரும்‌ இல்லை எனில்‌ -வெற்றறிக்கை அனுப்பிவைக்குமாறும்‌ சம்பந்தப்பட்ட பணிநியமன அலுவலர்களுக்கு அரசு ஆணையிடுகிறது.

அத்தற்காலிகத தட்டச்சர்கள்‌ மற்றும்‌ சுருக்கெழுத்துத்‌ தட்டச்சர்கள்‌ (நிலை – 111) எவரேனும்‌, அவர்களைப்‌ பணிநீக்கம்‌ செய்யக்கூடாது என சென்னை உயர்நீதிமன்றம்‌ மற்றும்‌ சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்‌ கிளையில்‌ வழக்கு தொடர்ந்து, அவ்வழக்கில்‌ இடைக்காலத்‌ தடை ஆணை ஏதேனும்‌ பெற்று நாளதுவரை சம்பந்தப்பட்ட வழக்கு நிலுவையில்‌ இருப்பின்‌, அவ்வழக்கின்‌ மனுதாரர்களுக்கு இப்பணியிடை முறிவு பொருந்தாது.இவ்வரசாணையானது சிறப்புப்‌ போட்டித்‌ தேர்வு 2009 ல்‌ தேர்ச்சி பெறாதோர்‌, விண்ணப்பித்து தேர்வு எழுதாதோர்‌ மற்றும்‌ தேர்வுக்குப்பின்‌ விண்ணப்பம்‌ நிராகரிக்கப்பட்டோர்‌ மற்றும்‌ வேறு சில காரணங்களுக்காக தற்காலிக அடிப்படையில்‌ தொடர்ந்து பணியாற்றி வருகின்றவர்களுக்கு மட்டுமே பொருந்தும்‌ எனவும்‌ பணிநியமன அலுவலர்களுக்கு தெரிவித்துக்‌ கொள்ளப்படுகிறது என குறிப்பிடப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!