தமிழ்நாடு 2023 -24ம் நிதியாண்டிற்கான சட்டமன்ற பேரவை – நிகழ்ச்சி நிரல் வெளியீடு!

0
தமிழ்நாடு 2023 -24ம் நிதியாண்டிற்கான சட்டமன்ற பேரவை - நிகழ்ச்சி நிரல் வெளியீடு!
தமிழ்நாடு 2023 -24ம் நிதியாண்டிற்கான சட்டமன்ற பேரவை - நிகழ்ச்சி நிரல் வெளியீடு!
தமிழ்நாடு 2023 -24ம் நிதியாண்டிற்கான சட்டமன்ற பேரவை – நிகழ்ச்சி நிரல் வெளியீடு!

தமிழகத்தில் 2023 -24ம் நிதியாண்டிற்கான நிதிநிலை அறிக்கை கடந்த மார்ச் 20 ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில் சட்டப்பேரவை கூட்டம் ஏப்ரல் 21 ஆம் தேதி வரை நடைபெறும் என சட்டப்பேரவை அலுவல் ஆய்வு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்ட நிலையில் நிகழ்ச்சி நிரல் குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

நிகழ்ச்சி நிரல்

தமிழகத்தில் சட்டப்பேரவை கூட்டத்தொடர் மார்ச் 20 ஆம் தேதி முதல் தொடங்கி இருக்கிறது. இந்நிலையில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பல துறைகள் குறித்த அறிவிப்புகளை வெளியிட்டார். அதன் பின் சபாநாயகர் அப்பாவு தலைமையில் அவரது அறையில் அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் நடைபெற்றது. அதில் ஏப்ரல் 21 ஆம் தேதி வரை சட்டப்பேரவை நடைபெறும் என முடிவு செய்யப்பட்டது. தற்போது நிகழ்ச்சி நிரல் வெளியாகி இருக்கிறது.

தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி தடை மசோதா – இன்று (மார்ச் 24) ஆளுநர் ஒப்புதலுக்கு அனுப்பி வைப்பு!

அதன் படி,

இன்று (24.3.2023) – 2023-24 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை மற்றும் வேளாண்மை நிதிநிலை அறிக்கை ஆகியவற்றின் மீது பொது விவாதம் – இரண்டாம் நாள்

25.03.2023 – அரசு விடுமுறை

26.03.2023 – அரசு விடுமுறை

27.03.2023 – 2023-24 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை மற்றும் வேளாண்மை நிதிநிலை அறிக்கை ஆகியவற்றின் மீது பொது விவாதம் – மூன்றாம் நாள்

Follow our Instagram for more Latest Updates

28.03.2023:

  • 1. 2023-24 ஆம் ஆண்டின் செலவிற்கான முன் பண மானிய கோரிக்கைகள் பேரவை முன் வைத்தல்
  • 2. 2022-23 ஆம் ஆண்டின் கூடுதல் செலவிற்கான மானிய கோரிக்கைகள் (இறுதி) பேரவைக்கு அளித்தல்
  • 3. 2022-23 ஆம் ஆண்டின் கூடுதல் செலவிற்கான மானிய கோரிக்கைகள் (இறுதி) மீது வாக்கெடுப்பு
  • 4. 2022-23 ஆம் ஆண்டின் கூடுதல் செலவிற்கான மானிய கோரிக்கைகள் குறித்த நிதி ஒதுக்க சட்ட முன் வடிவு – அறிமுகம் செய்தலும், ஆய்வு செய்தலும் நிறைவேற்றுதல்
  • 5. 2023-24 ஆம் ஆண்டின் செலவிற்கான முன்பண மானிய கோரிக்கைகள் மீது வாக்கெடுப்பு
  • 6. 2023-24 ஆம் ஆண்டின் செலவிற்கான முன்பண மானிய கோரிக்கைகள் குறித்த நிதி ஒதுக்க சட்ட முன் வடிவு- அறிமுகம் செய்தலும் ஆய்வு செய்தலும் நிறைவேற்றாலும்
  • 7. 2023-24 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை மற்றும் வேளாண்மை நிதிநிலை அறிக்கை ஆகியவற்றின் மீதான பொது விவாதத்திற்கு பதிலுரை
மானிய கோரிக்கைகளின் மீது விவாதமும் வாக்கெடுப்பும்:
  • 29.03.2023 – காலை- 40- நீர்வளத்துறை, 32- தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை
  • மாலை- 25- இயக்கூர்திகள் குறித்த சட்டங்கள் – நிருவாகம், 48- போக்குவரத்து துறை
  • 30.03.2023 – 34- நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, 42- ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை
  • 31.03.2023 – 20- உயர்கல்வித்துறை, 43- பள்ளிக்கல்வித்துறை
  • 1.4.2023 – 21 – நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை , 39- கட்டடங்கள், 31 – தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை
  • 2.4.2023 – அரசு விடுமுறை
  • 3.4.2023 – பேரவை கூட்டம் இல்லை
  • 4.4.2023 – மகாவீரர் ஜெயந்தி (அரசு விடுமுறை )
  • 5.4.2023 – 5 – வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, 6 – கால்நடை பராமரிப்பு, 7- மீன்வளம் மற்றும் மீனவர் நலன், 8 – பால்வளம்
  • 6.4.2023 – காலை 27 – தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தக துறை , 46- தமிழ் வளர்ச்சி, 44 – குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை மாலை – 12 – கூட்டுறவு 13 – உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு
  • 7.4.2023 – புனித வெள்ளி – அரசு விடுமுறை
  • 8.4.2023 – அரசு விடுமுறை
  • 9.4.2023 – அரசு விடுமுறை
  • 10.4.2023 – காலை 41 – வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை, 51 – இயற்கை சீற்றங்கள் குறித்த துயர்தணிப்பு மாலை 28 – செய்தி மற்றும் விளம்பரம், 30 – எழுது பொருள் மற்றும் அச்சு, 10 – வணிக வரிகள் 11 – முத்திரைதாள் மற்றும் பத்திர பதிவு
  • 11.4.2023 – 49 – இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை, 53 – சிறப்பு திட்ட செயலாக்க துறை, 17 – கைத்தறி மற்றும் துணிநூல்
  • 12.4.2023 – காலை- 3- நீதி நிருவாகம், 24 – சிறைகள் மற்றும் சீர்திருத்த பணிகள், 33 – சட்டத் துறை, மாலை – 14 – எரிசக்தி துறை, 37 – மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை
  • 13.4.2023 – காலை 26- வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை, 15- சுற்றுசூழல் மற்றும் காலநிலை மாற்றம், 54 – வனம் மாலை 9 – பிற்படுத்தப்பட்டோர் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, 18 – கதர், கிராம தொழில்கள் மற்றும் கைவினை பொருள்கள்
  • 14.4.2023 – தமிழ் புத்தாண்டு, டாக்டர் பி. ஆர். அம்பேத்கர் பிறந்த தினம் – அரசு விடுமுறை
  • 15.4.2023 – அரசு விடுமுறை
  • 16.4.2023 – அரசு விடுமுறை
  • 17.4.2023 – 52- மாற்றுத் திறனாளிகள் நலத்துறை, 45 – சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை
  • 18.4.2023 – காலை 19 – மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுதுறை, மாலை 4 – ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை
  • 19.4.2023 – காலை 29 -சுற்றுலா -கலை மற்றும் பண்பாடு, 47 – இந்து சமய அறநிலைய துறை , மாலை 36 – திட்டம், வளர்ச்சி மற்றும் சிறப்பு முயற்சிகள் துறை, 38 – பொதுத்துறை, 1 – மாநில சட்டமன்றம், 2 – ஆளுநர் மற்றும் அமைச்சரவை, 16 – நிதித்துறை, 35 – மனிதவள மேலாண்மைதுறை, 50 – ஓய்வூதியங்களும், ஏனைய ஓய்வுகால நன்மைகளும்
  • 20.4.2023 – 22 – காவல், 23 – தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள்
  • 21.4.2023 – 22 – காவல். 23 – தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் , அரசினர் சட்ட முன் வடிவுகள் -ஆய்வு செய்தலும் நிறைவேற்றதலும், ஏனைய அரசினர் அலுவல்கள்
Exams Daily Mobile App Download

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!