தமிழில் எழுத, படிக்க தெரிந்தால் ரூ.58,600 சம்பளத்தில் வேலைவாய்ப்பு – உடனே விண்ணப்பியுங்கள்!

0
தமிழில் எழுத, படிக்க தெரிந்தால் ரூ.58,600 சம்பளத்தில் வேலைவாய்ப்பு - உடனே விண்ணப்பியுங்கள்!
தமிழில் எழுத, படிக்க தெரிந்தால் ரூ.58,600 சம்பளத்தில் வேலைவாய்ப்பு - உடனே விண்ணப்பியுங்கள்!
தமிழில் எழுத, படிக்க தெரிந்தால் ரூ.58,600 சம்பளத்தில் வேலைவாய்ப்பு – உடனே விண்ணப்பியுங்கள்!

தமிழகத்தில் கொரோனா காலகட்டத்தில் அரசு சார்ந்த வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளிவராமல் இருந்தது. இந்த வகையில் தற்போது தொற்றின் வேகம் குறைந்துள்ளதால் மீண்டும் வேலைவாய்ப்பு அறிவிப்புகள் வெளியாகி வருகிறது. இந்நிலையில் இந்து சமய அறநிலையத்துறை இராமநாதபுரம் மாவட்டம் அருள்மிகு இராமநாதசுவாமி திருக்கோயிலில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்புகள் வெளியாகியுள்ளது.

விண்ணப்பிப்பது எப்படி:

தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள, இராமநாதபுரம் மாவட்டம் அருள்மிகு இராமநாதசுவாமி திருக்கோயிலில், காலியாக உள்ள தட்டச்சர், காவலர், டிக்கெட் விற்பனையாளர் ஆகிய பணியிடங்கள் நிரப்பப்படுகிறது.

IPL ரசிகர்களுக்கு சூப்பர் அறிவிப்பு – மீண்டும் இந்திய மண்ணில் கிரிக்கெட் தொடர்! BCCI அறிவிப்பு!

இந்த பணியிடங்களை நிரப்ப தகுதியான இந்து சமயத்தை சேர்ந்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.மொத்தம் 66 பணியிடங்கள் உள்ளன.

பணியின் பெயர் – தட்டச்சர் (Typist)

காலியாக உள்ள பணியிடங்கள் : 2

விண்ணப்பதாரர் கல்வித் தகுதி : 10ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அரசு தொழில்நுட்ப தட்டச்சர் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

மாத சம்பளம் : ரூ. 18,500 – 58,600 வரை

பணியின் பெயர் – டிக்கெட் விற்பனையாளர்

காலியாக உள்ள பணியிடங்கள் : 10

விண்ணப்பதாரர் கல்வித் தகுதி : 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

மாத சம்பளம் : ரூ. 18,500 – 58,600 வரை

பணியின் பெயர் : காவலர்

காலியாக உள்ள பணியிடங்கள் : 24

விண்ணப்பதாரர் கல்வித் தகுதி : தமிழ் எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.

மாத சம்பளம் : ரூ. 15,900 – 50,400 வரை.

பணியின் பெயர் :தூர்வை

காலியாக உள்ள பணியிடங்கள் : 20

விண்ணப்பதாரர் கல்வித் தகுதி : தமிழ் எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.

மாத சம்பளம் : ரூ. 10,000 – 31,500 வரை.

பணியின் பெயர் : துப்புரவு பணியாளர்

காலியாக உள்ள பணியிடங்கள்: 10

விண்ணப்பதாரர் கல்வித் தகுதி : தமிழ் எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.

மாத சம்பளம் : ரூ. 10,000 – 31,500 வரை

விண்ணப்பதாரர் வயது வரம்பு : 01.02.2022 அன்று 18 வயது முதல் 35 வயதுக்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பதாரர் தேர்வு செய்யப்படும் முறை : இந்த பணியிடங்களுக்கு எழுத்து தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை : இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://rameswaramramanathar.hrce.tn.gov.in/hrcehome/ajax/hppdf_view.php என்ற இணையதளப் பக்கத்தில் அறிவிப்புக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்களுடன்” இணை ஆணையர்/செயல் அலுவலர், அருள்மிகு இராமநாதசுவாமி திருக்கோயில், இராமேசுவரம் – 623526, இராமநாதபுரம் மாவட்டம்” என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசித் தேதி : 23.02.2022

இந்த அறிவிப்பு குறித்து மேலும் விவரங்கள் அறிய அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்று தெரிந்து கொள்ளலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here