தமிழகத்தில் அன்னிய மரக்கன்றுகளை வளர்க்க & விற்க நர்சரிகளுக்கு தடை – ஐகோர்ட் உத்தரவு!

0
தமிழகத்தில் அன்னிய மரக்கன்றுகளை வளர்க்க & விற்க நர்சரிகளுக்கு தடை - ஐகோர்ட் உத்தரவு!
தமிழகத்தில் அன்னிய மரக்கன்றுகளை வளர்க்க & விற்க நர்சரிகளுக்கு தடை - ஐகோர்ட் உத்தரவு!
தமிழகத்தில் அன்னிய மரக்கன்றுகளை வளர்க்க & விற்க நர்சரிகளுக்கு தடை – ஐகோர்ட் உத்தரவு!

தமிழகத்தில் வனப்பகுதியில் உள்ள அன்னிய மரக்கன்றுகளை அகற்றக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு விசாரணை இன்று நடைபெற்றது. இந்த விசாரணையின் முடிவில் நீதிபதிகள் முக்கிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார்.

அன்னிய மரக்கன்று

தமிழக வனப் பகுதிகளில் சீமைக்கருவேலம், பைன் உள்ளிட்ட உள்ள அந்நிய மரங்களை அகற்றக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கை நீதிபதிகள் என்.சதீஷ்குமார், டி.பரதசக்ரவர்த்தி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் கடந்த சில நாட்களுக்கு முன்பு இது தொடர்பாக வனத்துறை அறிக்கை தாக்கல் செய்தது. இந்த அறிக்கையில், சத்தியமங்கலம், முதுமலை சரணாலய பகுதிகளில் சுமார் 1,500 ஹெக்டேர் பரப்பளவில் அந்நிய மரங்கள் ஆக்கிரமித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இருமொழிக் கல்வி கொள்கை? அமைச்சர் விளக்கம்!

இந்த மரங்களை உடனடியாக அகற்றாவிடில், நம் நாட்டு மரங்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த அன்னிய மரங்களை அகற்ற அரசு ரூ.5.36 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. இதனை பயன்படுத்தி ஆனைமலை, சத்தியமங்கலம், முதுமலை, தர்மபுரி, திண்டுக்கல் மண்டலங்களில் உள்ள அந்நிய மரங்கள் அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த வழக்கு குறித்து இன்று மீண்டும் நீதிபதிகள் விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணை முடிவில் தமிழக அரசுக்கு கோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, தமிழகத்தில் அன்னிய மரக்கன்றுகளை அகற்ற முதற்கட்ட நடவடிக்கையாக அன்னிய மரக்கன்றுகளை வளர்த்து அதனை விற்கும் நர்சரிகளுக்கு தடை விதிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். அத்துடன் இதற்கான அரசாணையை தமிழக அரசு விரைவில் வெளியிட வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அன்னிய மரங்களை நீக்கும் பணிகளை தமிழ்நாடு காகித நிறுவனத்திடம் ஒப்படைப்பது தொடர்பாக தமிழக அரசு விரைவில் முடிவு எடுக்கப்பட வேண்டும் என்று நீதிபதிகள் கூறியுள்ளனர்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!