தமிழக சுகாதாரத் துறையில் 12ம் வகுப்பு முடித்தவர்களுக்கு வேலை – டிசம்பர் 15 விண்ணப்பிக்க கடைசி நாள்!
திருப்பத்தூர் மாவட்டத்தில் பொது சுகாதாரத்துறை நல சங்கம் மூலமாக இடைநிலை பணியாளர் மற்றும் பல்நோக்கு சுகாதார பணியாளர் ஆகிய தற்காலிக பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு வருகிறது. இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அம்மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
வேலைவாய்ப்பு:
கொரோனா பரவல் தொடங்கியது முதல் மருத்துவத் துறையினரின் பணி பல மடங்காக அதிகரித்துள்ளது. மேலும் பல்வேறு பணியிடங்களில் ஆட்கள் பற்றாக்குறை நிலவி வருகிறது. கடந்த மார்ச் மாதம் பரவிய கொரோனா இரண்டாம் அலை தாக்கத்தின் போது உரிய நேரத்தில் மருத்துவர்கள், மற்றும் செவிலியர்கள் போதிய அளவு இல்லாததால் நோயாளிகளுக்கு உரிய சிகிக்சை அளிக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதனை சரி செய்யும் பொருட்டு மத்திய அரசு மருத்துவ படிப்பு பயிலும் இறுதியாண்டு மாணவர்களையும், செவிலியர் இறுதியாண்டு பயிலும் மாணவர்களையும் தடுப்பு பணியில் ஈடுபடுத்திக் கொள்ள அனுமதி அளித்தது.
திருப்பதி தரிசனம் செல்வோருக்கு ஒரு குட் நியூஸ் – பஸ் டிக்கெட்டுடன் தரிசன டிக்கெட்!
இதனையடுத்து மருத்துவ கல்லூரி மாணவர்கள் கொரோனா தடுப்பு பணிகளை மேற்கொண்டனர். அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்கள் மற்றும் செவியர்களை தொடர்ந்து மற்ற பணிகளக்கும் ஆட்கள் தேர்வுகள் நடைபெற்றது. அந்த வகையில் தற்போது திருப்பத்தூர் மாவட்டத்தில் பொது சுகாதாரத்துறை நல சங்கம் மூலமாக இடைநிலை பணியாளர், பல்நோக்கு சுகாதார பணியாளர், சுகாதார ஆய்வாளர், ஆகிய தற்காலிக பதவிகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு வருகிறது. இடைநிலை சுகாதார பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் பெண்கள் 50 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். பிஎஸ்சி நர்சிங் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
தமிழகத்தில் டிச.15 வரை மழைக்கு வாய்ப்பு, கடலோர மாவட்ட மக்கள் கவனத்திற்கு – வானிலை அறிக்கை!
பல்நோக்கு சுகாதார பணியாளர் பதவிக்கு ஆண்கள் விண்ணப்பிக்கலாம். அவர் 50 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேற்கண்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் https://thirupathur.nic.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து அதை பூர்த்தி செய்து அதனுடன் உரிய ஆவணங்களை இணைத்து விண்ணப்பத்தை மாவட்ட துணை இயக்குனர் சுகாதார பணிகள் அலுவலகத்தில் டிசம்பர் 15ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.