தமிழக அரசு பள்ளி மாணவிகளுக்கு ரூ.1000 உதவித்தொகை திட்டம் – கல்வி இயக்குனர் சுற்றறிக்கை!
தமிழகத்தில் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித் திட்டத்தின் கீழ் மாணவிகளுக்கு ரூ.1000 கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பித்துள்ளனர். இந்த விவரங்களை உரிய தேதிக்குள் கல்லூரி கல்வி இயக்குனருக்கு அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது.
கல்வி உதவித்தொகை:
தமிழகத்தில் தற்போது செயல்பாட்டில் உள்ள தாலிக்கு தங்கம்’ திட்டத்திற்கு பதிலாக அரசுப்பள்ளி மாணவியருக்கு ரூ.1000 வழங்கும் திட்டம் கொண்டு வரப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அவர்கள் கடந்த வருடம் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலின் போது வாக்குறுதி அளித்தார். அதன்படி கடந்த மாதம் இத்திட்டம் அமலுக்கு வந்தது. இதன் அடிப்படையில் 6 – 12ம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் பயின்று கலை, அறிவியல் கல்லூரிகளில் சேரும் மாணவர்களுக்கு அவர்களின் கல்விக்கு உதவும் வகையில் மாதந்தோறும் ரூ.1000 வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. இந்த உதவித்தொகை திட்டம் மூலம் உயர்கல்வியில் சேரும் அரசு பள்ளி மாணவிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Exams Daily Mobile App Download
இந்த “மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதி திட்டம்” என்ற திட்டத்தை செயல்படுத்த https://penkalvi.tn.gov.in என்ற தனி இணையதளம் அரசு சார்பாக உருவாக்கப்பட்டுள்ளது. தகுதி வாய்ந்த மாணவிகள் இந்த இணையதளம் வாயிலாக பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டது. மேலும் மாநிலம் முழுவதும் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு விண்ணப்பங்கள் பெறப்பட்டது. மாணவிகள் விண்ணப்பிக்கும் போது 10 மற்றும் 12-ம் வகுப்பு மதிப்பெண் பட்டியல் நகல், பள்ளி மாற்றுச் சான்றிதழ் நகல் ஆகியவற்றை இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தேர்வில்லாமல் சென்னையில் மத்திய அரசு வேலை – சம்பளம்: ரூ.30,000/-
இந்த நிலையில் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித் திட்டம் குறித்து கல்லூரி கல்வி இயக்குனர் மண்டல கல்லூரிக் கல்வி இயக்குநர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில் மாணவிகள் விவரங்களை பதிவேற்றம் செய்ய வரும் 18.7.2022 அன்று இறுதி நாளாகும். ஏதேனும் மாணவியர்களின் விவரங்கள் விடு பட்டாலோ அல்லது உள்ளீடு செய்யாமல் இருந்தால் அதற்கு அப்பாடப்பிரிவு சார்ந்த பொறுப்பாசிரியரும் மற்றும் முதல்வரும் பொறுப்பாவார்கள். மேலும் பணி முடித்த விவரத்தினை 18.7.2022 அன்று மாலை 4 மணிக்குள் இயக்குநருக்கு [email protected] என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும் ஏறி சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
TNPSC Online Classes
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்