தமிழக அரசு ஓய்வூதியதாரர்களுக்கு ஜூலை 20ல் குறைதீர் கூட்டம் – அறிவிப்பு வெளியீடு!

0
தமிழக அரசு ஓய்வூதியதாரர்களுக்கு ஜூலை 20ல் குறைதீர் கூட்டம் - அறிவிப்பு வெளியீடு!
தமிழக அரசு ஓய்வூதியதாரர்களுக்கு ஜூலை 20ல் குறைதீர் கூட்டம் - அறிவிப்பு வெளியீடு!
தமிழக அரசு ஓய்வூதியதாரர்களுக்கு ஜூலை 20ல் குறைதீர் கூட்டம் – அறிவிப்பு வெளியீடு!

தமிழகத்தில் உள்ள அரசு ஊழியர்களுக்கு வருங்கால வைப்பு நிதி மூலமாக ஓய்வூதியம் வழங்கப்பட்டு வரும் நிலையில் ஓய்வூதியர் குறைதீர்ப்பு கூட்டம் வருகிற ஜூலை 20 ஆம் தேதி நடைபெற உள்ளதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

குறைதீர் கூட்டம் அறிவிப்பு:

தமிழக அரசு சார்பில் துறைகளின் கீழ் பணிபுரிந்து வரும் ஊழியர்களுக்கு பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டு வருகின்றன. மேலும் அவர்களது ஓய்வூதிய காலத்திற்கு பின்னர் மாதந்தோறும் குறிப்பிட்ட தொகை ஓய்வூதியமாக வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் சென்னை ராயப்பேட்டை நெடுஞ்சாலை இலக்கம், 37-ல் உள்ள ஊழியர் வருங்கால வைப்பு நிதி பிராந்திய அலுவலகத்தில் ஆண்டுதோறும் ஓய்வூதியருக்கான குறைதீர்ப்பு கூட்டம் நடத்தப்படுகிறது.

ஏர்டெல், ஜியோ மற்றும் VI ரூ.199 திட்டங்கள் – அன்லிமிடெட் அழைப்புகள் மற்றும் டேட்டா!

இந்த கூட்டமானது 1995 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஓய்வூதிய திட்டம் மூலமாக ஊழியர்கள் ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு நடத்தப்படுகிறது. இந்த கூட்டத்தில் ஊழியர் வருங்கால வைப்பு நிதி பிராந்திய அலுவலகம், சென்னை வடக்கு, சென்னை தெற்கு ஆகிய அலுவலகங்களிலிருந்து பென்ஷன் பேமண்ட் ஆர்டர் எனப்படும் ஓய்வூதிய ஆணை பெற்ற ஓய்வூதியதாரர்கள் பங்கேற்று தங்களது புகார்களை தெரிவிக்கலாம்.

இந்த ஆண்டுக்கான குறைதீர் கூட்டம் வருகிற ஜூலை 20 ஆம் தேதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த புகார்கள் ஓய்வூதிய குறைதீர்ப்பு கூட்டம் ஈபிஎஸ் 1995 என்ற தலைப்பிட்டு மின்னஞ்சல் மூலமாக 16.07.2021 மாலை 5 மணிக்குள் கிடைக்குமாறு [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு, பெயர், வருங்கால வைப்பு நிதி கணக்கு எண் UAN/PPO எண், புகார் விவரங்கள் போன்ற அனைத்தையும் குறிப்பிட்டு அனுப்ப வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

மேலும் ஓய்வூதியதாரர்கள் அனுப்பும் மின்னஞ்சலில் குறிப்பிட்டுள்ள அவர்களது தொலைபேசி எண் அல்லது மின்னஞ்சல் முகவரிக்கு, ஓய்வூதியர் குறைதீர்ப்பு வெபினாருக்கான லிங்க் அனுப்பப்படும் என்று சென்னை ஊழியர் வருங்கால வைப்பு நிதி பிராந்திய ஆணையர் ரித்து ராஜ் மேத்தி செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அனைத்து ஓய்வூதியதாரர்களும் வருகிற 16 ஆம் தேதி மாலைக்குள் உங்களுடைய விவரங்களை தெரிவித்தால் மட்டுமே அந்த லிங்க் உங்களுக்கு அனுப்பப்படும். எனவே விரைவாக மேலே தெரிவித்த மின்னஞ்சலுக்கு உங்களுடைய விவரங்களை அனுப்ப வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here