தமிழக அரசில் IIT டிப்ளமோ படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு – முழு விவரம் இதோ!

0
தமிழக அரசில் IIT டிப்ளமோ படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு - முழு விவரம் இதோ!
தமிழக அரசில் IIT டிப்ளமோ படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு - முழு விவரம் இதோ!
தமிழக அரசில் IIT டிப்ளமோ படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு – முழு விவரம் இதோ!

தமிழக அரசின் திட்டமிடல் துறை மற்றும் நில அளவை துறையில் 1089 இடங்கள் காலியாக உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. மேலும் இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் எதிர்பார்க்கப்படுவதாக அரசு தெரிவித்துள்ளது.

தமிழக அரசு:

தமிழகத்தில் அனைத்து போட்டி தேர்வுகளுக்கும் அறிவிப்புகள் வெளியாகி வருகின்றது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு தான் குரூப் 4 மற்றும் குரூப் 2 தேர்வுகள் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. மேலும் அடுத்து குரூப் 1 மற்றும் காவலர் தேர்விற்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. இந்த நிலையில் நகர திட்டமிடல் துறை மற்றும் நில அளவை துறையில் காலி இடங்கள் இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும் இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் www.tnpsc.gov.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசு ஊழியர் ஓய்வூதிய திட்டத்தில் மாற்றம்? முழு விவரம் இதோ!

மேலும் இப்பணிக்கான வயது வரம்பு 1.7.2022 அன்று பொது பிரிவினருக்கு 32க்குள்ளும் மற்றும் தமிழக அரசால் வழங்கப்பட்ட Field Surveyor and Draughtsman பயிற்சி பெற்றிருக்கும் பொது பிரிவினருக்கு 5 ஆண்டுகள் சலுகை வழங்கப்படும் என்றும் இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு உச்ச வயது வரம்பு கிடையாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான பதிவு கட்டணம் 150, தேர்வு கட்டணம் 100 ஐ ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பிரிவில் காலியாக உள்ள பணியிடங்கள் குறித்து விளக்கப்பட்டுள்ளது.

அதாவது,

1. Field Surveyor: 798 இடங்கள். சம்பளம்: 19,500- 71,900. தகுதி: சிவில் இன்ஜினியரிங்கில் டிப்ளமோ அல்லது சர்வேயர் பணிக்கான ஐடிஐ டிரேடு சான்றிதழ் அல்லது சென்னை இன்ஜினியரிங் குழுவால் வழங்கப்பட்ட ராணுவ டிரேடு சர்வேயர் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

2. Draftsman: 236 இடங்கள். சம்பளம்: 19,500-71,900. தகுதி: சிவில் இன்ஜினியரிங்கில் டிப்ளமோ அல்லது சிவில் டிராப்டஸ்மேன் டிரேடில் ஐடிஐ அல்லது சென்னை இன்ஜினியரிங் குழுவால் வழங்கப்பட்ட ராணுவ டிரேடு டிராப்ட்ஸ்மேன் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

3. Surveyor cum Assistant Draughtsman: 55 இடங்கள். சம்பளம்: 19,500-71,900. தகுதி: சிவில் இன்ஜினியரிங்கில் டிப்ளமோ அல்லது சிவில் டிராப்ட்ஸ்மேன்ஷிப் படிப்பில் ஐடிஐ அல்லது ஏதாவதொரு சான்றிதழ் படிப்பை முடித்திருக்க வேண்டும்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!