100 நாள் வேலைத்திட்டத்தின் சம்பளம் ரூ.300 ஆக உயர்வு? தமிழக அரசு நடவடிக்கை!

0
100 நாள் வேலைத்திட்டத்தின் சம்பளம் ரூ.300 ஆக உயர்வு? தமிழக அரசு நடவடிக்கை!
100 நாள் வேலைத்திட்டத்தின் சம்பளம் ரூ.300 ஆக உயர்வு? தமிழக அரசு நடவடிக்கை!
100 நாள் வேலைத்திட்டத்தின் சம்பளம் ரூ.300 ஆக உயர்வு? தமிழக அரசு நடவடிக்கை!

தமிழகத்தில் தேசிய ஊரக வளர்ச்சி திட்டத்தின் கீழ் பணிபுரிபவர்களுக்கு திமுக தலைமையிலான அரசு ஊதியத்தை 250ல் இருந்து 275 ஆக உயர்த்தியது. தற்போது இந்த ஊதியத்தை 300 ஆக உயர்த்த அரசு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்துள்ளார்.

தேசிய ஊரக வளர்ச்சி திட்டம்:

இந்தியாவில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு சட்டத்தின் கீழ் பொது வேலை செய்ய விருப்பம் உள்ள கிராமப்புற வயது வந்தவர்களுக்கு, அரசின் குறைந்த ஊதியத்துடன், ஒரு நிதியாண்டில் 100 நாட்களுக்கு கட்டாய சிறப்பு திறன் இல்லா உடலுழைப்பு வேலைவாய்ப்பு அளிக்கப்படும். கடந்தாண்டு முதல் கொரோனா பரவல் காரணமாக வேலைக்கு வருபவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. மேலும் 55 வயதிற்கு மேல் உள்ளவர்கள் பணி செய்யக்கூடாது. கொரோனா தீவிரமாக பரவும் காரணத்தால் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தீவிரமடையும் கொரோனா தொற்று, வார இறுதி ஊரடங்கு அமல் – மாநில அரசு நடவடிக்கை!

இந்த அறிவிப்பால் கிராமப்புற மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இந்த நிலையில் தற்போது அமைச்சர் பெரியகருப்பன் விழுப்புரம் மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி திட்ட பணிகளை ஆய்வு செய்தார். மேலும் ஊரக வளர்ச்சி திட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட பணிகள் குறித்தும், நிலுவையில் உள்ளவைகள் பற்றியும் அலுவலர்களிடம் கேட்டறிந்தார். அப்போது பணிகளை விரைந்து முடிக்க தேவையான நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

தமிழகத்தின் 4 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும் – வானிலை அறிக்கை!

அதனை தொடர்ந்து விழுப்புரம் மாவட்டத்தில் தேசிய ஊரக வளர்ச்சி பணிகள் குறித்து ஆட்சியர் அலுவலகத்தில் அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அதில் தமிழகத்தில் தேசிய ஊரக வளர்ச்சி திட்டத்தின் கீழ் பணிபுரிபவர்களுக்கு திமுக தலைமையிலான அரசு ஊதியத்தை 250ல் இருந்து 275 ஆக உயர்த்தியது. தற்போது இந்த ஊதியத்தை 300 ஆக உயர்த்த அரசு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்துள்ளார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here