இதை நீங்கள் செய்தால் ரூ.1 லட்சம் வரை சிறப்பு பரிசு – தமிழக அரசின் அட்டகாசமான அறிவிப்பு!

0
இதை நீங்கள் செய்தால் ரூ.1 லட்சம் வரை சிறப்பு பரிசு - தமிழக அரசின் அட்டகாசமான அறிவிப்பு!
இதை நீங்கள் செய்தால் ரூ.1 லட்சம் வரை சிறப்பு பரிசு - தமிழக அரசின் அட்டகாசமான அறிவிப்பு!
இதை நீங்கள் செய்தால் ரூ.1 லட்சம் வரை சிறப்பு பரிசு – தமிழக அரசின் அட்டகாசமான அறிவிப்பு!

தமிழகத்தில் நடப்பு 2022-23 ஆம் ஆண்டில், பனை மேம்பாட்டு இயக்கத்தின் கீழ் 10 லட்சம் பனை விதைகளை விநியோகம் செய்ய உள்ளனர். இந்த நிலையில் தற்போது இந்த கருவியை கண்டுபிடிக்கும் நபர்களுக்கு சிறப்பு பரிசாக அரசு ரூ.1 லட்சம் வழங்க உள்ளதாக அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அரசின் அறிவிப்பு:

தமிழகத்தின் மாநில மரமாக விளங்கும் பனை மரத்தின் விளைச்சலை ஊக்கப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் பனை மேம்பாட்டு இயக்கத்தின் கீழ் கடந்த ஆண்டு 76 இலட்சம் பனை விதைகளும், 1 இலட்சம் பனங்கன்றுகளும் விநியோகம் செய்யப்பட்டது. மேலும் பனைப் பொருட்களின் மதிப்பை கூட்டுவதற்கான நவீன இயந்திரங்கள் விநியோகம், அரசு நியாய விலைக் கடைகளில் பனை வெல்லம் விற்பனை, பனை மரங்களில் ஆராய்ச்சி ஆகியவற்றிற்காக நடவடிக்கை மேற்கொண்டது.

அதன் தொடர்ச்சியாக நடப்பு ஆண்டிலும், பனை மேம்பாட்டு இயக்கத்தின் கீழ் 10 இலட்சம் பனை விதைகளை விநியோகம் செய்ய திட்டமிட்டுள்ளது. மேலும் பனை வெல்லம், பனங்கற்கண்டு தயாரிப்பு ஆகியவற்றிற்கு பயிற்சி அளிக்க முடிவு செய்துள்ளது. முதற்கட்டமாக 250 பனை விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்க உள்ளது. அத்துடன் இப்பயிற்சியை பெறும் விவசாயிகளுக்கு 50% மானியத்தில் உபகரணங்கள் விநியோகிக்கவும் உள்ளது. பனையோலை மூலமாக பொருட்களை தயாரிக்க 100 பெண்களுக்கு பயிற்சி வழங்கவும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

வாசிப்பு பழக்கத்தை ஏற்படுத்த இப்படி ஒரு திட்டமா? – தமிழக அரசின் புதிய ஐடியா!

Exams Daily Mobile App Download

இந்த நிலையில் பனை மரம் ஏறும் தொழிலாளர்களின் நலன் கருதி தமிழக அரசு அரசாணை ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, பனை மரத்தின் மீது தொழிலாளர்கள் எவ்வித ஆபத்துமில்லாமல், எளிதாக பனை மரம் ஏறுவதற்கு வசதியாக கருவி ஒன்றை கண்டுபிடித்து கொடுக்கும் நபர் அல்லது நிறுவனங்களுக்கு சிறப்பு பரிசாக ரூ.1 லட்சம் வரை வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் பல்கலைக்கழகங்கள், தனியார் நிறுவனங்கள், முன்னோடி விவசாயிகள், தொழிலாளர்கள் உள்ளிட்டவர்கள் கலந்து கொள்ளலாம். இதில் கலந்து கொள்ள விரும்பும் நபர்கள் அல்லது நிறுவனங்கள் www.tnhorticulture.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!