தமிழகத்தில் பொது இடங்களில் குப்பை கொட்டினால் அபராதம்? அரசு அறிவிப்பு!

0
தமிழகத்தில் பொது இடங்களில் குப்பை கொட்டினால் அபராதம்? அரசு அறிவிப்பு!
தமிழகத்தில் பொது இடங்களில் குப்பை கொட்டினால் அபராதம்? அரசு அறிவிப்பு!
தமிழகத்தில் பொது இடங்களில் குப்பை கொட்டினால் அபராதம்? அரசு அறிவிப்பு!

தமிழகத்தில் பொது இடங்களில் குப்பை அல்லது கழிவுகளை கொட்டினாலோ, சுவர்களில் சுவரொட்டிகள் மற்றும் விளம்பரங்கள் ஒட்டினாலோ கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை மீறும் பட்சத்தில் அபராதம் விதிக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசு:

தமிழகத்தில் உள்ள மாநகராட்சி பகுதிகளை விரிவுபடுத்தி ஸ்மார்ட் சிட்டியாக மாற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதாவது, வளர்ந்து வரும் தொழில்நுட்ப வளர்ச்சிக்கேற்ப இந்தியாவில் அனைத்து விதமான வசதிகளும் பெருக வேண்டும் என்ற நோக்கில் அரசு செயல்பட்டு வருகிறது. இதன் காரணமாக அனைத்து மாவட்டங்களில் உள்ள நகராட்சி, ஊராட்சிகளில் பாதாள சாக்கடை திட்டம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதற்கான பணிகள் தமிழகத்தில் அனைத்து பகுதிகளிலும் நடைபெற்று வருகிறது. இதனை தொடர்ந்து போக்குவரத்தினை விரிவுபடுத்தும் திட்டங்களும் செயல்பட்டு வருகின்றன.

தமிழகத்தில் ஸ்மார்ட் சிட்டியாக மாற்ற குறிப்பிட்ட மாநகராட்சிகளை தேர்வு செய்து அந்த பகுதியினை குப்பை, கழிவுகள் இல்லாத மாவட்டமாக மற்றும் முயற்சியில் அரசு ஈடுபட்டு வருகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் பெரு மாநகராட்சியான சென்னையில் குப்பைகள் கொட்டினால் அல்லது சுவரொட்டிகள் ஒட்டினால் அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது சென்னை மாநகராட்சியின் சார்பில் சென்னை மாநகரை தூய்மையாகவும், அழகுடனும் பராமரிக்க சிங்கார சென்னை 2.0 உள்ளிட்ட பல்வேறு திட்டங்களின் கீழ் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தமிழகத்தில் முதியோர்களுக்கான உதவித்தொகை – விண்ணப்பங்கள் வரவேற்பு!

மேலும் சென்னை மாநகரை தூய்மையாக பராமரிக்கும் வகையில் பெருநகர சென்னை மாநகராட்சி திடக்கழிவு மேலாண்மை துணை விதிகள் 2019 ன் படி பொது மற்றும் தனியார் இடங்களில் குப்பைகள் மற்றும் கட்டுமான கழிவுகளை கொட்டுபவர்கள் மீது அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 18.08.2022 முதல் 02.09.2022 வரை பொது இடங்களில் குப்பை கொட்டிய நபர்களுக்கு ரூ.8,39,520 அபராதமும், கட்டுமான கழிவுகளை கொட்டிய நபர்களுக்கு ரூ.6,25,810 அபராதமும், அரசு மாநகராட்சி கட்டிடங்கள் மற்றும் பொது இடங்களில் விதிகளை மீறி சுவரொட்டி ஒட்டிய 211 நபர்கள் மீது காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டு ரூ.97,700 அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!