தமிழக அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது உயர்வு ஆணை ரத்து? நீதிமன்றம் உத்தரவு!

1
தமிழக அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது உயர்வு ஆணை ரத்து? நீதிமன்றம் உத்தரவு!
தமிழக அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது உயர்வு ஆணை ரத்து? நீதிமன்றம் உத்தரவு!
தமிழக அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது உயர்வு ஆணை ரத்து? நீதிமன்றம் உத்தரவு!

தமிழகத்தில் அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை 60 ஆக உயர்த்தி வெளியிடப்பட்ட அரசாணையை ரத்து செய்ய கோரி வழக்கு தொடரப்பட்டது. இதில் நீதிமன்றம் தலையிட முடியாது எனக்கூறி சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை வழக்கை தள்ளுபடி செய்துள்ளது.

ஓய்வு பெறும் வயது:

தமிழகத்தில் அரசு பணியாளர்கள் ஓய்வு பெறும் வயதை 58-லிருந்து 59 ஆக உயர்த்தி கடந்த ஆண்டு மே மாதம் அரசு அறிவித்தது. இது அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள் அரசியலமைப்புகள், உள்ளாட்சி அமைப்புகள், அனைத்து பொதுத்துறை நிறுவன ஊழியர்கள் ஆகியோர்களுக்கு பொருந்தும் என தெரிவிக்கப்பட்டது. இதற்கு பல்வேறு தரப்பினர் தனது எதிர்ப்பை தெரிவித்தனர். மேலும் அரசு நடப்பாண்டு பிப்ரவரி மாதம் அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை 59-லிருந்து 60 ஆக உயர்த்தி அரசாணை பிறப்பித்தது.

பொதுத்துறை வங்கிகளில் Clerk வேலைவாய்ப்பு – OBC க்கு மறுப்பு?

அரசின் இந்த அறிவிப்பால் இளைஞர்களுக்கு அரசு பணி கிடைக்க கால தாமதம் ஆகும். ஏற்கனவே தமிழகத்தில் வேலையில்லா திண்டாட்டம் நிலவுகிறது. மேலும் அரசு பணியாளர்கள் வயது உயர்வால் உடல் நலக்குறைபாடு ஏற்பட கூடும். இந்த நிலையில் தொடர்ந்து பணிபுரிவது ஏற்றதல்ல. இத்தகைய சூழலில் அரசின் முடிவு அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது என பலரும் கருத்து தெரிவித்துள்ளனர். இந்த அரசாணையை ரத்து செய்யக் கோரி மதுரை திருமங்கலத்தை சேர்ந்தவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல வழக்கு ஒன்றை தொடர்ந்தார்.

TN Job “FB  Group” Join Now

இந்த வழக்கு இன்று நீதிபதிகள் சிவஞானம், அனந்தி ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், அரசு பணியாளர்கள் ஓய்வு பெறும் வயதை 60 ஆக உயர்த்தியது அரசின் கொள்கை முடிவு. இதில் நீதிமன்றம் தலையிட முடியாது என்று கூறி கோபிநாத்தின் பொதுநல வழக்கை உயர்நீதிமன்ற மதுரை கிளை தள்ளுபடி செய்தது. தற்போது வரை தமிழகத்தில் அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயது 60 ஆக உள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!