தமிழக அரசு ஊழியர்களின் பழைய ஓய்வூதிய திட்டம் அமல்? பரிசீலனை!

3
தமிழக அரசு ஊழியர்களின் பழைய ஓய்வூதிய திட்டம் அமல்? பரிசீலனை!
தமிழக அரசு ஊழியர்களின் பழைய ஓய்வூதிய திட்டம் அமல்? பரிசீலனை!
தமிழக அரசு ஊழியர்களின் பழைய ஓய்வூதிய திட்டம் அமல்? பரிசீலனை!

தமிழக அரசு ஊழியர்களின் நீண்ட நாள் கோரிக்கையான பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்துவது குறித்து தமிழக அரசு தற்போது பரிசீலனை செய்து வருகிறது.

ஓய்வூதிய திட்டம்:

தமிழகத்தில் கடந்த 2003ம் ஆண்டு முதல் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டு வந்த பழைய ஓய்வூதிய திட்டம் மாற்றியமைக்கப்பட்டு புதிய ஓய்வூதிய திட்டம் வகுக்கப்பட்டது. புதிய ஓய்வூதிய திட்டத்தின் படி அரசு ஊழியர்கள் தங்கள் அடிப்படை ஊதியம் மற்றும் அகவிலைப்படியில் இருந்து 10 சதவிகித வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது. இதனால் அரசு ஊழியர்கள் மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

தமிழகத்தில் நீட் நுழைவுத்தேர்வு அவசியமா? மக்கள் கருத்துக்கள் வரவேற்பு!

இதற்காக பலமுறை உண்ணாவிரத போராட்டத்தையும் மேற்கொண்டனர். இதை அடுத்து தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் தேர்தல் பிரச்சாரத்தின் போது புதிய ஓய்வூதிய திட்டம் ரத்து செய்யப்பட்டு பழைய ஓய்வூதிய திட்டம் மீண்டும் அமல்படுத்தப்படும் என்று வாக்குறுதி அளித்தார். இந்நிலையில் தமிழக முதல்வரான முக ஸ்டாலின் அவர்கள் பதவியேற்ற பின்பு தனது தேர்தல் வாக்குறுதிகளை ஒன்றொன்றாக நடைமுறைப்படுத்தி வருகிறார்.

TN Job “FB  Group” Join Now

மேலும் பழைய ஓய்வூதிய திட்டத்தை தொடர்வதற்கான சாத்திய கூறுகளை ஆராய அமைத்த வல்லுநர் குழு தற்போது தங்கள் அறிக்கையை தமிழக அரசிடம் சமர்ப்பித்துள்ளது. இதை அடுத்து குழு சமர்ப்பித்த அறிக்கையை தற்போது தமிழக அரசு பரிசீலனை செய்து வருகிறது. இதன் காரணமாக அரசு ஊழியர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படும் என்றும் இதற்கான முறையான அறிவிப்பை முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் விரைவில் அறிவிப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

3 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!